Traditional Fridays.. பாரம்பரிய உடையில் வராவிட்டால்... கார்ப்பரேட் நிறுவனம் அனுப்பிய மெயிலால் பெண் ஊழியர் அதிருப்தி
சென்னை: கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் Traditional Friday நாளில் பாரம்பரிய உடை அணியாமல் வரும் ஊழியர்களுக்கு வார்னிங் கொடுத்து எச்ஆர் சார்பில் இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பெண் ஊழியர் அதிருப்தியானார். மேலும் அதனை ‛ரெடிட்' தளத்தில் வெளியிட்டு தனது எரிச்சலை பகிர்ந்துள்ளார்.
ஐடி துறை உள்பட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் அவ்வப்போது விழாக்கள் நடக்கும். பொங்கல், தீபாவளி, ஓணம் உள்பட பல்வேறு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.

ஆட்டம், பாட்டம், டிஜே மியூசிக் என்று நிறுவனமே களைக்கட்டும். விழாவில் மேனேஜர் முதல் ஜூனியர் வரை அனைவரும் கண்களை கவரும் பாரம்பரிய ஆடைகளை அணிந்து அசத்துவார்கள்.
இது மட்டுமின்றி ஒவ்வொரு வாரமும் நிறுவனங்களில் Fun Friday, Traditional Fridays என்று பல நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது தற்போது ஒரு நிறுவனத்தில் ‛டிரெடிஷனல் ஃப்ரைடே' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் இ-மெயிலில் தகவல் அனுப்பப்பட்டது.
அதில் கூறியிருந்த விஷயம் தான் பெண் ஊழியர் ஒருவரை கோபமடைய வைத்துள்ளது. அதாவது ‛டிரெடிஷனல் ஃப்ரைடே' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதனால் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும்.
ஜெனரல் ஊழியர்களுக்கு ரூ.100ம், சீனியர் மேனேஜ்மென்ட் ஊழியருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மெயிலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுதான் அந்த ஊழியரை டென்ஷனாக்கியது. இதுதொடர்பாக அந்த பெண் ஊழியர் ரெடிட்' சமூக வலைதளங்களில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அலுவலகத்தின் இ-மெயிலை பகிர்ந்த அவர், ‛‛என்னுடைய, எச்ஆரிடம் இருந்து இப்போது தான் இந்த இ-மெயில் வந்தது. அவர்களுக்கு இதைத் தவிர வேறு வேலையே இல்லையா?. நான் இங்கு சேர்ந்த முதல் ஆறு மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் சாதாரண உடைகள் அணிய அனுமதி இருந்தது.
பிறகு வெள்ளிக்கிழமைகளில் ஃபார்மல்/பாரம்பரிய உடைகள் என்று மாற்றினார்கள். நானும் சரி என்று ஏற்றுக்கொண்டேன். என்னையும் சேர்த்து, எங்களில் பெரும்பாலானோர் ஃபார்மல் உடைகளையே அணிகிறோம். இன்று அவர்கள் இந்த இ-மெயிலை அனுப்பி இருக்கிறார்கள். இதை பார்த்து எனக்கு கோபம் வந்துவிட்டது.
ஏனென்றால் என்னிடம் எளிமையான பாரம்பரிய உடை இல்லை. இதற்காக பணம் செலவழிக்கவும் தயாராக இல்லை. அலுவலகம் இப்படி செய்வது சட்டப்படி சரியா? இவர்களை எரிச்சலடைய செய்ய வேண்டும் என்றால் லெஹங்காவை அணிந்து வந்து ‛பாரம்பரிய உடை' என சொல்ல வேண்டும்'' என்று தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications