Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு 2025 கொண்டாட்டம்: மெரினா சாலையில் போக்குவரத்து தடை.. சென்னை முழுக்க மாற்றங்கள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆங்கில புத்தாண்டை ஒட்டி சென்னையில் இன்று (டிசம்பர் 31) மாலை முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் இன்று நள்ளிரவு இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். 2025 ஆம்‌ ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி பொதுமக்கள்‌ அமைதியாகவும்‌, பாதுகாப்பாகவும்‌ புத்தாண்டு (New Year 2025) கொண்டாட சென்னை காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Traffic Arrangements and Road Closures in Chennai for New Year 2025 Celebrations

புத்தாண்டு - சென்னை போக்குவரத்து மாற்றம்

கடற்கரை, வழிபாட்டு தலங்கள், சாலைகள், பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் உள்பட சென்னை முழுவதும் 19 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வருவோருக்கான வாகன நிறுத்தங்களுக்கான இடங்களும் அறிவித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, இன்று (டிசம்பர் 31 ஆம் தேதி) புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை, எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையானது, இந்தப் புத்தாண்டினை விபத்து இல்லாத கொண்டாட்டங்களாக இருப்பதை உறுதி செய்ய சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்தத்திற்கான சிரமங்களை தவிர்க்க பின்வரும் போக்குவரத்து மாற்றங்களும். வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட உள்ளது.

காமராஜர் சாலை மற்றும் எலியாட் கடற்கரை:

கடற்கரை உட்புற சாலை இன்று டிசம்பர் 31 அன்று மாலை 7 மணி முதல் நாளை (ஜனவரி 1) காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்.

கடற்கரை உட்புற சாலையில் மாலை 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.

காமராஜர் சாலை போர் நினையிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று (டிசம்பர் 31) மாலை 8 மணி முதல் (ஜனவரி 1) அன்று காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.

அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

டாக்டர்ஆர் கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்கே.மட் சாலை சந்திப்பு மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.

பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் நிசர்ன் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலஜா பாய்ண்ட் அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

வாளஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

கொடிலரச் சாலையில், வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச்சின்னம் நோக்கி வாகளங்கள் அனுமதிக்கப்படாது.

கிரீன்வேஸ் பாயிண்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் ஆர்கே மட் யூ-திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு, தேவதாதன் தெரு, ஆர்கே மடம் சாலை, வெங்கடேஸ்வர அக்ரஹாரம் தெரு, சாய்பாபா கோயில், நாகேஸ்வர பூங்கா வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் ஆர்பி சுரங்கப்பாதை வடபகுதிக்கு திருப்பி விடப்பட்டு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, அண்ணா ரோட்டரி கத்திட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி சந்திப்பு வழியாகா சந்திப்பை அடைவதற்கு தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.

காமராஜர் சாலை வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:

சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரத்திலிருந்து பெரியார் சிலை நோக்கி ஒற்றை வரிசை நிறுத்தம்)
வாலாஜா சாலை (தமிழ்நாடு மாநில விருந்தினர் மாளிகை அருகே அண்ணா சிலையை நோக்கி - ஒற்றை வரிசை நிறுத்தம்)
தீவுத்திடல் மைதானம்
பொதுப்பணித்துறை மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)
பிரஸ் கிளப் சாலை
பொதுப்பணித்துறை வளாகம் காவல்துறை வாகனங்கள் மட்டும்
கலைவாணர் அரங்கம்
விக்டோரியா விடுதி
பாரதி சாலை (விக்டோரியா ஹோட்டல் சாலை x பாரதி சாலை சந்திப்பில் இருந்து - ஒற்றை வரிசை நிறுத்தம்)
லாயிட்ஸ் சாலை (மாற்று திறன் ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் நடேசன் சாலையை நோக்கி - ஒற்றை வரிசை நிறுத்தம்)
இராணி மேரி கல்லூரி வளாகம்.
லேடி வெலிங்டன் பள்
NKT
டால்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகே ஐஸ் ஹவுஸ் நோக்கி ஒற்றை வரிசை நிறுத்தம்)
பரத் சாரணர் வளாகம்
தெற்கு கால்வாய் சாலை (மந்தவெளி நோக்கி
தெற்கு கால்வாய் சாலை (பட்டினம்பாக்கம் நோக்கி)

எலியாட் கடற்கரை போக்குவரத்து மாற்றம்:

டிசம்பர் 31 ஆம் தேதியான இன்று இரவு 8 மணி முதல் 01.01.2025 அன்று காலை 6 மணி வரை 6வது அவென்யூ நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

6வது அவென்யூ 5வது அவென்யூ சந்திப்பு, 4வது மெயின் ரோடு சந்திப்பு. 3வது மெயின் ரோடு சந்திப்பு. 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்.

மூடப்படும் மேம்பாலங்கள்

டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் ஜனவரி 1 காலை 6 மணி வரை, சென்னையில் போக்குவரத்து மூடப்படும் மேம்பாலங்கள் பட்டியல்:

1.மியூசிக் அகாடமி மேம்பாலம்

2.ஜி.ஆர்.எச்.மேம்பாலம்

3.பீட்டர்ஸ் சாலை மேம்பாலம்

4.ஆழ்வார்பேட்டை மேம்பாலம் நுழைவாயில்

5.காந்தி மண்டபம் மேம்பாலம்

6.இந்திரா நகர் யூ திருப்பம்

7.பாந்தியன் மேம்பாலம்

8.மகாலிங்கபுரம் மேம்பாலம்

9.ஜெமினி மேம்பாலம், ஜி.என்.செட்டி சாலை

10.ஜி.கே.எம்., மேம்பாலம்

11.வாணி மகால் மேம்பாலம்

12.உஸ்மான் மேம்பாலம்

13.சக்கரபாணி தெருவில் இருந்து ரெங்கராஜபுரம் மேம்பாலம்

14.மகாலிங்கபுரம் மேம்பாலம் தெற்கு

15.வடபழநி மேம்பாலம்

16.அடையார் மேம்பாலம்

17.வேளச்சேரி மேம்பாலம்

18.விமான நிலைய மேம்பாலம்

19.புதிய வள்ளலார் பாலம்

20.அண்ணா ஆர்ச் மேம்பாலம்

21.100 அடி சாலை மேம்பாலம்

22.திருமங்கலம் பாலம்

23.முரசொலி மாறன் மேம்பாலம்

புத்தாண்டை முன்னிட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஆபத்தான முறையில் சாகச சவாரி செய்தல், ஒலி மாசு ஏற்படுத்துதல் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+