சென்னை அண்ணா நகரில் ரெடியாகுங்க மக்களே.. நாளை ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’.. போக்குவரத்து அடியோடு மாற்றம்
சென்னை: சென்னை அண்ணாநகர் 2-வது நிழற்சாலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 9 மணிவரை மட்டும் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அண்ணா நகரில் நாளை காலை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னை, அண்ணா நகர் பகுதியில் காவல்துறையினர் சார்பில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பங்கேற்று கொண்டாடி மகிழ்வார்கள். இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும் வகையில் உற்சாக நடனம், பம்பரம் விடுதல், சைக்கிளிங், ஸ்கேட்டிங், வில்வித்தை, பாரம்பரிய நடனங்கள், கராத்தே உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். பொதுமக்கள் குழந்தை போல் மாறி எந்த இடையூறும் இன்றி நடனமாடி மகிழ்வார்கள். இந்த நிகழ்ச்சி நாளை அண்ணா நகரில் நடைபெற உள்ளது,

சென்னை போக்குவரத்து போலீசார் இதுபற்றி கூறுகையில், சென்னை அண்ணாநகர் 2-வது நிழற்சாலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற நிகழ்ச்சி நடைபெற போகிறது. இதன் காரணமாக 2-வது நிழற்சாலையில் புளுஸ்டார் சந்திப்பு முதல் 2-வது நிழற்சாலை மற்றும் 3-வது பிரதான சாலை சந்திப்பு வரை நாளை(ஜூலை 28) காலை 6 மணி முதல் 9 மணிவரை மட்டும் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படும்.
ஆகவே நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை திருமங்கலத்திலிருந்து அண்ணாநகர் ரவுண்டானா, சிந்தாமணி நோக்கி செல்லும் வாகனங்கள் புளூஸ்டார் சந்திப்பில் 5-வது நிழற்சாலையில் இடதுபுறம் திரும்பி, 6-வது நிழற்சாலை, ரவுண்டானாவை அடைந்து சிந்தாமணி, ரவுண்டானாவுக்கு செல்ல வேண்டும்.
இதேபோல் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை, திருமங்கலத்திலிருந்து அமைந்தகரை, ஈ.வெ.ரா. சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், புளூஸ்டார் சந்திப்பில் 5-வது நிழற்சாலையில் வலதுபுறம் திரும்பி 4-வது நிழற்சாலையை அடைந்து அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்லவேண்டும்.
அண்ணாநகர் ரவுண்டானாவிலிருந்து திருமங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள் 2-வது நிழற்சாலையில் நல்லி சில்க்ஸ் அருகே 3-வது பிரதான சாலையில் இடதுபுறம் திரும்பி 4-வது நிழற்சாலை வழியாக திருமங்கலம், முகப்பேர் நோக்கி செல்ல வேண்டும். புளுஸ்டார் சந்திப்பில் 5-வது நிழற்சாலையிலிருந்து 2-வது நிழற்சாலைக்கு (அண்ணாநகர் ரவுண்டானா நோக்கி) இடதுபுறம் திரும்புவதை தவிர்த்து 5-வது நிழற்சாலையில் நேராக சென்று 4-வது நிழற்சாலை வழியே செல்லலாம்" இவ்வாறு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications