சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. இந்த வழியாக போகாதீங்க! டேக் டைவர்சன்!
சென்னை: பணியின்போது உயிர் நீர்த்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும், காவலர் உயிர் நீத்தார் நினைவு நாள் அக்டோபர் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று இந்நினைவு நாள் கடைபிடிக்கப்படுவதால், சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையினர் 10 பேர் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த இந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பணியின்போது உயிர் நீர்த்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று சென்னையில் இந்த நினைவுநாள் அனுசரிக்கப்படுவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து காவல்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் 'காவலர் நீத்தார் நினைவு நாள்' அனுசரிப்பதை முன்னிட்டு இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை, நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால் மெரினா பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் காரணீஸ்வரர் கோயில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திருப்பி, காரணீஸ்வரர் பக்கோடா தெரு - அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். எதிர் திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
எம்ஆர்டிஎஸ் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு தாண்டி காந்தி சிலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. காவலரின் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நேரத்தில் மாற்று வழியாக அந்த வாகனங்கள் லைட் அவுஸ், எம்ஆர்டிஎஸ் சாலை வழியாக சென்று லாயிட்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மயிலாப்பூரில் இருந்து பாரிஸ் நோக்கி வரும் மாநகர பேருந்து (தடம் எண்.21 ஜி) ராயப்பேட்டை ஒன்றாவது பாயின்ட் மற்றும் மியூசிக் அகாடமி பாயின்ட் மற்றும் டிடிகே சாலை, இந்தியன் வங்கி சந்திப்பு மற்றும் ராய்பேட்டை நெடுஞ்சாலை வழியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சந்திப்பு வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கதீட்ரல் சாலை வழியாக லைட் அவுஸ் நோக்கி வரும் மாநகர பேருந்து (தடம் எண்.27 டி) வி.எம்.தெருவில் திருப்பிவிடப்பட்டு, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை மற்றும் டி ஸ்லிவா சாலை, பக்தவச்சலம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, பீமனா கார்டன் சந்திப்பு, சி.பி.ராமசாமி சாலை, சீனிவாசன் தெரு வழியாக ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம்.
காமராஜர் சாலையில் (நேப்பியர் பாலம் முதல் லைட் அவுஸ்) அனைத்து வர்த்தக மற்றும் கனரக வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications