தவெக மாநாடு.. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக வெற்றிக்கழக்தின் முதல் மாநாட்டிற்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. மாநாட்டுக்காக சுமார் 50,000 இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தமாக 2 லட்சம் பேர் வரை மாநாட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், நாளை மட்டும் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

அதாவது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் பேருந்துகள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன. கனரக வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கார்களை பொறுத்த அளவில், திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டிருக்கின்றன.

திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும், கனரக வாகனங்கள் வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாநாடு அப்டேட் என்ன?: இந்த மாநாட்டில் பங்கேற்க மேற்குறிப்பிட்டதை போல 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருப்பதால், அதற்கேற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கினற்ன. குறிப்பாக தொண்டர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி குறித்து முக்கிய கவனம் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 300 தற்காலிக குடிநீர் தொட்டிகளும், 350 நடமாடும் கழிவறைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.

மாநாட்டில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக 5 நுழைவுவாயில்களும், 15 எக்சிட் வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மாநாட்டிற்கு வரும் சிறுவர்கள் தொலைந்துவிட்டால் அவர்களை கண்டுபிடிக்க வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, பெண்களுக்கும்,கர்ப்பிணிகளுக்கும் தனி இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தொண்டர்கள் யாருக்கேனும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்க 150 மருத்துவர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

பார்க்கிங்குக்கு சுமார் 150 ஏக்கரில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, கண்காணிப்பு பணிக்காக 700 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மாநாட்டு திடலுக்கு விஜய் வருவதற்கு என தனியாக 1.5 கி.மீ நீளத்தில் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. மாலை 6 மணியளவில் விஜய் தனது அரசியல் உரையை தொடங்குவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+