சென்னை மக்களே.. நாளை இந்த ஏரியா பக்கம் போகமுடியாது.. கால்பந்து போட்டி காரணமாக போக்குவரத்து மாற்றம்!
சென்னை: சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை இரவு கால்பந்து போட்டி நடைபெற உள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. கால்பந்து போட்டியை காண வரும் பார்வையாளர்கள் வாகன நிறுத்தும் இடங்கள் தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ஜவஹர்லால் நேரு வெளிப்புற மைதானத்தில் நாளை (மார்ச் 30) இரவு 7 மணிக்கு பிரேசில் லெஜண்ட்ஸ் vs இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. ஃபிஃபா உலக கோப்பை வென்ற பிரேசில் முன்னாள் வீரர்களான ரொனால்டினோ, கில்பெர்டோ சில்வா, ரிவால்டோ உள்ளிட்ட பல பிரபலமான வீரர்கள் விளையாட உள்ளனர்.

சென்னையில் கால்பந்து போட்டி
இந்த போட்டியை பார்க்க 2,000 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் நாளை மாலை 3 மணி முதல் இரவு 11 வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், "வாகன நிறுத்துமிடத்திற்கான இடம் குறைவாக இருப்பதால் பார்வையாளர்கள் பொது போக்குவரத்துகளான சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம், புறநகர் ரயில்கள் மற்றும் மாநகர போக்குவரத்தை பயன்படுத்தி அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் விளையாட்டு மைதானத்தை நடந்து அடையலாம்.
பார்வையாளர்கள் செல்ல வேண்டிய வழி
பார்வையாளர்கள் விபி பார்க் சாலை (விக்டோரியா ஹால் சாலை) வழியாக சென்று மைதானத்தின் பின்புற நுழைவு வழியாக மைதானத்தை அடையலாம். பார்வையாளர்கள் இராஜா முத்தையா சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.
சென்ட்ரல் ரயில் நிலைய மார்க்கமாக கார்களில், பைக்குகளில் வரும் பார்வையாளர்கள் பார்க் சாலையில் (விக்டோரியா ஹால் சாலை) வலதுபுறம் திரும்பி, மைதானத்தின் பின்புறம் வழியாக வாகன நிறுத்துமிடமான "பி"மைதானம் மற்றும் "சி" மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கிருந்து விளையாட்டு மைதானத்தை அடையலாம்.
ராஜா முத்தையா சாலையில் பேருந்துகளுக்கு தடை
ராஜா முத்தையா சாலையில் மாநகர பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக அந்த வாகனங்கள் ஈவிஆர் சாலை ஈவிகே சம்பத் சாலை டவுட்டன், நாராயண குரு சாலை, சூளை நெடுஞ்சாலை மற்றும் டெமெல்லஸ் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். எழும்பூர் இரயில் நிலைய மார்க்கமாக வாகனங்களில் வரும் பார்வையாளர்கள் நேராக சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று பார்க் (விக்டோரியா ஹால் சாலை) இடதுபுறம் திரும்பி மைதானத்தின் பின்புற வழியாக நிறுத்துமிடமான "பி" மைதானம் மற்றும் "சி" மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கிருந்து விளையட்டு மைதானத்தை அடையலாம்
நேரு ஸ்டேடியம் நோக்கி செல்ல அனுமதி இல்லை
அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது சூளை ரவுண்டானாவில் இருந்து நேரு விளையாட்டு மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் இலக்கை அடைய சூளை நெடுஞ்சாலை, ஈவிகே சம்பத் சாலை, ஈ.வி.ஆர் சாலை வழியாக திருப்பி விடப்படுவார்கள். மேலும் அதிக போக்குவரத்து நெரிசலின் போது ஜெர்மியா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை (வேப்பேரி காவல் நிலையம்) சந்திப்பிலிருந்து நேரு ஸ்டேடியம் நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் போட்டியை பார்வையிட வரும் பார்வையாளர் கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது
வாகன நிறுத்துமிடங்கள்
1. B-Ground Stadium Park Road (Victoria Hall Road)
2. C-Ground Stadium Park Road (Victoria Hall Road)
3. Kannappar Thidal (New Elephant Gate Bridge)
4. KP Corporation Ground (Basin Bridge Road)
5. Ripon Building (EVR Salai)
6. Vetenary Hospital (Vepery High Road)
7. Corporation Ground(Hunters Road)
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications