தி.நகர் பக்கம் போறீங்களா? முக்கிய சாலைகளில் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம்
சென்னை: தலைநகர் சென்னையில் உஸ்மான் சாலையில் மேம்பால கட்டுமான பணிகள் நடக்க உள்ளதால் அடுத்த ஓராண்டிற்கு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிராபிக் என்பது நகரங்களுக்கு முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டன. முன்பெல்லாம் நாட்டில் இருக்கும் ஓரிரு நகரங்களில் மட்டுமே டிராபிக் மோசமாக இருக்கும். ஆனால், இப்போது இரண்டாம்கட்ட நகரங்களிலும் கூட நெரிசல் அதிகரித்தே வருகிறது.

சென்னையை பற்றி சொல்லவே வேண்டாம். சென்னையில் கூட்ட நெரிசல் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இதை கருத்தில் கொண்டு நெரிசலை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு பக்கம் பொது போக்குவரத்தை வலிமையாக்க மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது.
புதிய மேம்பாலம்: அதேபோல மற்றொருபுறம் சாலைகளை விரிவுபடுத்துவது, மேம்பாலங்களை அமைப்பது போன்ற பணிகளிலும் சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதன்படி இப்போது மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை புதிய மேம்பாலம் பணிகள் தொடங்க உள்ளது. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இந்த பக்கம் போகாதீங்க! RBI சுரங்கப்பாதையில் இன்று முதல் 3 மாதம் போக்குவரத்து மாற்றம்
அடுத்த ஓர் ஆண்டிற்கு: இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 28.04.2025 வரை ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்..
வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ்) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை. பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட்சோலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.
போலீசார் அறிவிப்பு: பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.
தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம்.
போக்குவரத்து மாற்றம்: சிஐடி நகர் 1வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.
தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து அரகிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications