ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்த விபரீதம்.. இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
சென்னை: நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் தளத்தில் விபத்து ஏற்பட்டு 28 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜெயிலர்'. ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்ணா, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

ஜெயிலர் - 2 படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, மோகன்லால், பவன் கல்யாண், பாலகிருஷ்ணா ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவிலும், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூர் அருகே ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் ஜெயிலர் படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த படப்பிடிப்பு பணியில் பணிபுரியும் கார்த்திகேயன் (28) என்பவர் , மின் இணைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த கானத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரோதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கார்த்திகேயன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வீடு போல அமைக்கப்பட்ட செட்டில் இவர் மின் விசிறி மாட்டும்போது, மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷூட்டிங்கில் டெக்னிஷியன் பலியான சம்பவம் யூனிட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளுக்கு கால்ஷீட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவத்தால் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications