சென்னை குரோம்பேட்டையில் நெஞ்சை உலுக்கிய சோகம்! ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
சென்னை: சென்னை குரோம்பேட்டை பெரிய ஏரியில் குளிக்க சென்ற சிறுவர், சிறுமிகள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே பகுதியை சேர்ந்த 2 பெண் குழந்தைகள் உள்பட 4 பேரை காணவில்லை என போலீசில் புகார் கொடுப்பட்ட நிலையில் இன்று 4 பேரியில் குரோம்பேட்டை ஏரியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை குரோம்பேட்டை அருகே லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் யுவனேஷ் (வயது 10), தேவதர்ஷன் (13) மற்றும் சிறுமிகள் பூஜா (13), குஷி (13) ஆகியோர் ஒன்றாக விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டருகே விளையாடிய சிறுவர்கள் திடீரென காணாமல் போகினர்.

இதனால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்களை காணவில்லை. அப்பகுதியில் தான் குரோம்பேட்டை பெரிய ஏரி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சிலர் ஏரியில் குளித்துக்கொண்டிருந்ததாக தெரிவித்தனர். இதனால் போலீசார் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ஏரியில் தேடினர். இந்த நிலையி சிறுவர்கள், சிறுமிகள் 4 பேரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
