கோயில் குளத்தில் துடிதுடித்த பிஞ்சுகள்.. வேலைக்கு போன பெற்றோரால் நிகழ்ந்த விபரீதம்! அதிர்ந்த சென்னை
சென்னை: சென்னை அருகே 5 மற்றும் 3 வயது மகன்களை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்ற தம்பதியால் பெரும் விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் விட்டு சென்ற சிறுவர்கள் இருவரும் விளையாட்டு ஆர்வத்தில் அப்பகுதியில் இருந்த குளத்தில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சென்னையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அயனம்பாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 32). இவரது மனைவி வசந்தி (26). இவர்களுக்கு 5 வயது ரியாஸ் என்ற சிறுவனும், ரிஸ்வான் என்ற 3 வயது மகனும் இருந்தனர்.

வேலைக்கு சென்ற தம்பதி
தமீம் அன்சாரி ஆன்லைனில் உணவு விநியோகிக்கும் வேலை செய்து வருகிறார். வசந்தி அருகிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், மகன்களை எப்போதும் அங்கன்வாடி மையத்தில் விட்டுவிட்டு செல்வார்கள். ஆனால் நேற்று அங்கன்வாடி மையம் விடுமுறை என்பதால், இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு காலையிலேயே வேலைக்கு சென்றுவிட்டனர்.
குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
சிறுவர்கள் இருவரும் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் மாலை நேரத்தில் வீட்டு அருகே உள்ள பொன்னியம்மன் கோவில் குளம் அருகே விளையாட்டு மிகுதியில் சென்றனர். அப்போது அங்கு யாரும் இல்லாததால், திடீரென எதிர்பாராதவிதமாக இருவரும் குளத்திற்குள் விழுந்துள்ளனர். குளத்தின் ஆழம் அதிகம் என்பதால், இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதற்கிடையில் அந்த வழியாக சென்றவர்கள் சிறுவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் பிள்ளைகள் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
தலா 3 லட்சம் நிவாரணம்
தகவல் அறிந்து வந்த திருவேற்காடு போலீசார், பலியான சிறுவர்கள் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் கணவன் மனைவி இருவரும் வழக்கமாக அங்கன்வாடி மையத்தில் விட்டுவிட்டே செல்வார்களாம். அங்கன்வாடி மையம் விடுமுறை என்றால் வீட்டை உள்ளே பூட்டிவிட்டு வேலைக்கு செல்வார்களாம்.
ஆனால் நேற்று அவர்கள், மகன்கள் இருவரையும் வீட்டில் அடைத்து வைத்து விட்டு வெளியே பூட்டாமல், திறந்தபடியே சென்றார்களாம். இதனால் தான் வீட்டின் வெளியே வந்து விளையாடிய சிறுவர்கள் இருவரும் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமம், மகாத்மா காந்தி நகர், பொன்னியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் திரு. தமீம் அன்சாரி (எ) தமிழரசு மற்றும் அவரது மனைவி திருமதி வசந்தா ஆகிய இருவரும் நேற்று (01.11.2025) நண்பகல் 12.00 மணியளவில் பணி நிமித்தமாக தங்களது இரண்டு குழந்தைகள் ரியாஸ் (வயது 5) மற்றும் செல்வன் ரிஸ்வான் (வயது 3) ஆகிய இருவரையும் வீட்டில் விட்டு சென்றுள்ளனர்.
முதல்வர் பொது நிவாரண நிதி
இந்த நிலையில் மேற்படி குழந்தைகள் இருவரும் அருகிலுள்ள பொன்னியம்மன் கோவில் குளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என்று கூறப்பட்டுள்ளது .
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications