தெய்வமே கேட்டிருச்சா.. மார்க்கெட்டிங் அழைப்புகள் முடிவுக்கு வருகிறதா? டிராய் சூப்பர் உத்தரவு
சென்னை: பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற, தொல்லை தரும் வர்த்தக அழைப்புகள் தருகின்றன. இப்படிப்பட்ட ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்படாதவர்களே இல்லை.. எதாவது ஒரு 10 நம்பரை டயல் செய்து தினமும் லோன் வேண்டுமா, கிரெடிட் கார்டு வேண்டுமா, இன்சூரன்ஸ் வாங்குங்க என்று வரும் தொல்லைகளுக்கு டிராய் நிறுவனம் முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளது.
நீங்கள் ஏதாவது ஒரு முக்கிய வேலையில்இருக்கும் போது, அல்லது அலுவலகத்தில் மீட்டிங்கில் இருக்கும் போது, வாகனத்தில் செல்லும் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென அழைப்பு வரும். அப்படி வரும் அழைப்புகள் சாதாரண நம்பர்களில் இருந்தே வரும். இப்படி வரும் அழைப்புகள் பல விதமான ஸ்பேம் அழைப்புகளாகவும், டெலி மார்க்கெட்டிங் அழைப்புகளாகவும் இருக்கும்.

இந்த வங்கியில் இருந்து பேசுறோம், அந்த வங்கியில் இருந்து பேசுறோம் என்று கூறி அழைப்பார்கள். பர்சனல் லோன் வாங்குங்க... கடன் வாங்குங்க என்று கேட்பார்கள். இதேபோல் ஹெல்த் இன்சூரன்ஸ் போடுங்க என்று கேட்டு அழைப்பார்கள். இதேபோல் சேமிப்பு திட்டங்கள், டெலி ஷாப்பிங், கிரெடிட் கார்டு, மார்க்கெட்டிங், மோசடி அழைப்புகள் என பல அழைப்புகள், நேரத்தை காலி செய்துவிடும். இதேபோல் திடீர் மார்க்கெட்டிங் அழைப்புகளால் எரிச்லுக்கு உள்ளாகுகிறார்கள். இதில் அமைச்சர்கள் முதல் சாதாரண குடிமகன்கள் வரை எல்லாருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இப்போது உள்ள ஸ்பேம் அழைப்புகள் நமக்கு எவ்வளவு தலைவலியை ஏற்படுத்தினாலும், அவற்றை சாதாரணமாகப் புறக்கணித்து விடுவது மட்டும் இப்போதைக்கு தீர்வாக உள்ளது. சிலர் ஸ்பேம் அழைப்பை பார்த்தால்ஏற்க மாட்டார்கள். சிலர் ஸ்பேம் அழைப்பு என்று தெரிந்தால் பிளாக் லிஸ்டில் போடுவார்கள்.. இதை தாண்டி பெரிய தீர்வு இப்போது வரை இல்லை.
ஸ்பேம் அழைப்புகளை நிரந்தரமாகத் தடுக்க, டிராய் டிஎன்டி எனப்படும் ஒரு சிறப்பு சேவையைக் கொண்டு வந்தது. இதன்படி முன்பு டிஎன்டி சேவையை ஒருவர் செயல்படுத்தினால், ஸ்பேம் கால்கள் மட்டுமல்லாமல், வங்கி அழைப்புகள், ஆன்லைன் டெலிவரி அழைப்புகள் போன்றவையும் தடை செய்யப்படும். ஆனால் இப்போது உள்ள டிஎன்டி சேவையில் மூன்றாம் தரப்பு வணிக அழைப்புகளை மட்டுமே குறிப்பிட்டு தடுக்க முடியும் என்ற நிலை உள்ளத. இந்த சேவையை பெற SMS பகுதிக்கு சென்று START என டைப் செய்து , பின்னர், 1909 என்ற எண்ணுக்கு இந்த செய்தியை அனுப்ப வேண்டும்.
அப்படி செய்தால், உங்கள் சேவை வழங்குநர் எந்த வகையான அழைப்புகளை தடுக்க விரும்புகிறீர்கள் எனும் பட்டியல் வரும் . அதில் நீங்கள் எது தொடர்பான அழைப்புகளைத் தடுக்க விரும்புகிறீர்களோ, அது சார்ந்த குறியீட்டைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக கடன், கிரெடிட் கார்டு, சுகாதாரம், ரியல் எஸ்டேட், கல்வி போன்ற பல வகையில் குறியீடுகள் இருக்கும்.
இதில் நீங்கள் தடுக்க விரும்பும் குறியீட்டை தேர்வு செய்து, 1909 என்று எண்ணுக்கு அனுப்புவதால், தேவையில்லாத ஸ்பேம் அழைப்புகளிலிருந்து நீங்கள் விடுபடலாம். இதனை தொலைத்தொடர்பு சேவை வழங்குநர், உங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்தும் செய்தியை திருப்பி அனுப்புவார்.
இறுதியில், 24 மணி நேரத்திற்குள் DND சேவை உங்கள் மொபைல் எண்ணில் தொடங்கப்படும். அதேநேரம் வழக்கமான , வங்கி அழைப்புகள், ஆன்லைன் டெலிவரி அழைப்புகளை எதையும் தடுக் முடியாத நிலை இருக்கிறது. அதேநேரம் சிலர் சாதாரண நம்பரில் டெலி மார்க்கெட்டிங் செய்வதால் டிஎன்டி சேவையின் நோக்கமே சுத்தமாக நிறைவேறுவது இல்லை. இதுபோன்ற தேவையற்ற, தொல்லை தரும் அழைப்புகள் வருவது, பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
குறிப்பாக பதிவுசெய்யப்படாத டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு12 லட்சத்துக்கு மேற்பட்ட புகார்கள் டிராய்க்கு வந்தன. இந்த ஆண்டு, முதல் 6 மாதங்களில் 7 லட்சத்து 90 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டிருக்கிறது. இதையடுத்து பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற, தொல்லை தரும் வர்த்தக அழைப்புகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்’ உத்தரவு பிறப்பித்துள்ளது.
அப்படி எந்த நிறுவனத்தின் மீதாவது புகார்கள் வந்தால், அந்த நிறுவனம் பயன்படுத்தும் அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளையும் துண்டிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 'டிராய்’ தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும்,அந்நிறுவனங்களை2 ஆண்டுகள்வரை கருப்பு பட்டியலில் சேர்க்கவேண்டும் என்றும் டிராய் அறிவுறுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications