ரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு.. சென்னை டூ நெல்லைக்கு எவ்வளவு கூடியுள்ளது? முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சாதாரண பயணிகள் ரயிலில் 500 கிமீ தூரத்திற்கு பயணக் கட்டணம் அதிகரிக்கவில்லை. அதே நேர்த்தில் 501 - 1500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 5 உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, குமரி, நெல்லைக்கு எவ்வளவு கூடியுள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.

பயணிகளின் குறைகளை கேட்டறிந்து பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே செய்து வருகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலனை செய்து வந்தது. இந்த நிலையில், இந்த கட்டண உயர்வானது இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Train fare hike Indian Railway

ரயில் கட்டணம் உயர்வு

ஏசி அல்லாத விரைவு ரயில் பெட்டிகளில் 500 கி.மீ வரை கட்டண உயர்வு இல்லை என்றும், 501 - 1500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 5 உயர்கிறது. 1501 - 2500 கி.மீ வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ.10 உயர்கிறது. 2500 - 3000 கி.மீட்டர் வரை 2ஆம் வகுப்பு கட்டணம் ரூ.15 உயர்கிறது. அதாவது 500 கிமீ தூரத்திற்கு மேல் பயணம் செய்யும் ஒரு கிமீ தூரத்துக்கும் 1 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஸ்லீப்பர் மற்றும் சாதாரண முதல் வகுப்பு பெட்டிகளில் ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. NON AC ஸ்லீப்பர், முதல் வகுப்பு, 2ஆம் வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு தலா 1 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி ரயில் பெட்டிகளில் 1, 2, 3 வகுப்புகள் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி விரைவு ரயில்களில் முதல் வகுப்பு, 2 டயர், 3 டயர், ஏசி சேர் கார் வகுப்புகளில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பழைய கட்டணம், புது கட்டணம்

மூன்றாம் வகுப்பில் இருந்து முதல் வகுப்பு வரையிலான அனைத்து ஏசி பெட்டிகளுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை - நெல்லை இடையில் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிக்கு ரூ.1,040 பழைய கட்டணம் என்றால் இனி ரூ.1,053 என்றும், சென்னை -நாகர்கோவிலுக்கு பழைய கட்டணம் ரூ.1,110 ஆக இருந்தது இனி ரூ.1,125 ஆகவும் கிலோ மீட்டருக்கு ஏற்ப வசூலிக்கப்படும்)

சென்னை டூ நெல்லைக்கு எவ்வளவு உயர்வு

இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டும் என்றால் எவ்வளவு விலை அதிகரித்துள்ளது என்பதை பார்க்கலாம். சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டியில் எவ்வளவு உயர்ந்துள்ளது என்று பார்க்கலாம்.

சென்னை டூ தூத்துக்குடி - ரூ.395 (பழைய கட்டணம்) - ரூ. 402 (புது கட்டணம்)
சென்னை டூ நெல்லை - ரூ.395 (பழைய கட்டணம்) - ரூ. 402 (புது கட்டணம்)
சென்னை டூ குமரி - ரூ.415 (பழைய கட்டணம்) - ரூ. 423 (புது கட்டணம்)
சென்னை டூ நாகர்கோவில் - ரூ.425 (பழைய கட்டணம்) - ரூ. 433 (புது கட்டணம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+