சென்னை வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை இன்று தொடக்கம்.. 18 வருட காத்திருப்புக்கு தீர்வு
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். தினசரி லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு செல்கிறார்கள். மெட்ரோ ரயில் சேவை வந்துவிட்டாலும் சென்னையின் முக்கிய போக்குவரத்தாக இருப்பது பறக்கும் ரயில் தான். வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என்று மக்கள் 18 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது இன்று நிறைவேறியுள்ளது.

வேளச்சேரி - பரங்கிமலை
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இன்று காலை தொடங்கியுள்ளது. 18 ஆண்டு கால காத்திருப்புக்கு தீர்வு கிடைத்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இரு மார்க்கமும் 86 ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 43 ஜோடி ரயில்சேவை பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று கடற்கரை - வேளச்சேரி இடையே 4 ரயில்களும், பரங்கிமலை - வேளச்சேரி இடையே 6 ரயில்களும் இயக்கப்படவுள்ளன. முதல் சேவையாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே அதிகாலை 5.25 மணிக்கும், கடற்கரை - பரங்கிமலை இடையே காலை 5 மணிக்கும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. கடைசி ரயில் சேவையாக இரவு 10.25 மணிக்கு கடற்கரை - பரங்கிமலை இடையே ரயில் இயங்கும்.
ரயில்வே அறிவிப்பு
சென்னை கடற்கரை - பரங்கி மலை - வேளச்சேரி மார்க்கத்தில் தினசரி 96 ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வேதுறை அறிவித்துள்ளது. வேளச்சேரி, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம். பரங்கிமலை வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதில் ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டும் பறக்கும் ரயில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் சென்னை மக்கள் எளிதில் பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications