ரயில்வேயின் 2 வது லட்டு.. உள்ளே ஒரே கசப்பு! எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் அறிவிப்பில் டுவிஸ்ட்
சென்னை: கேரள மாநிலம் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில் நிரந்திரமாக்கப்பட்டு வாரம் 2 முறை இயக்கப்படும் என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்புடன், பல பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிர்ச்சியடையும் அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஜூம் மாதம் 4 ஆம் தேதி முதல் எர்ணாகுளம் வேளாங்கண்ணி எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 06035/06036) எர்ணாகுளத்தில் புறப்பட்டு வேளாங்கண்ணி வரை சென்று மீண்டும் எர்ணாகுளத்திற்கு வந்தடைந்து இயங்கி வருகிறது.

சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் புறப்படும் இந்த ரயில் கோட்டையம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவலிக்கரா, காயங்குளம், சாஸ்தா கோட்டா, கொல்லம், குந்தாரா, கொட்டாரக்கரா, புனலூர், தென்மலை வழியாக தமிழ்நாட்டின் செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடைந்து மீண்டும் இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு இதே தடத்தின் வழியாக திங்கள்கிழமை நண்பகல் 11. 40மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைந்து வருகிறது .
வாரம் ஒரு முறை மட்டும் இயங்கி வந்த இந்த சிறப்பு விரைவு ரயிலை புதுடெல்லி ரயில்வே வாரியம் வாரம் இரு முறை நிரந்தரமாக இயங்கும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்திரவின் படி எர்ணாகுளம் வேளாங்கண்ணி விரைவு ரயில் (வண்டி எண் 16361) எர்ணாகுளத்தில் சனிக்கிழமை நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணியை வந்து அடையும்.
மீண்டும் இந்த வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விரைவு ரயில் ( வண்டி எண் 16362) வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடையும். மீண்டும் எர்ணாகுளத்தில் இருந்து திங்கள் கிழமை நண்பகல் 12 .35 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 05. 50 மணிக்கு வேளாங்கண்ணியை வந்து அடையும்.
மீண்டும் செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை நண்பகல 12 மணிக்கு எர்ணாகுளத்தை வந்த டையும். இந்த விரைவு ரயில் கோட்டையம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், காயங்குளம், கொல்லம், கொட்டாரக்காரா, புனலூர், செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி ,அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிரந்தர ரயிலாக இயக்கப்படுவதற்கு இப்பகுதி ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு - கேரளா இரண்டு மாநிலங்களை இணைக்கும் தேசிய ஒருமைப்பாட்டு ரயிலாகவும், சபரிமலை அய்யப்பன் கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் போன்ற மும்மதங்களின் வழிபாட்டு தலங்களை இணைக்கும் மத நல்லிணக்க ரயிலாகவும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் விளங்குகிறது
அதே நேரம் இந்த விரைவு ரயில் முன்பு சிறப்பு விரைவு ரயிலாக இயங்கும் போது நிறுத்தப்பட்ட இடங்களை தற்போதைய அறிவிப்பில் நிறுத்தும் இடங்களாக அறிவிக்கவில்லை. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், பேராவூரணி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இது நின்று சென்ற நிலையில், புதிய அறிவிப்பில் அந்த ஊர்களின் பெயர்கள் இடம்பெறாதது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.
இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே உபயோகிப்போர் ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என் ஜெயராமன் திருச்சி கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்து இருக்கிறார். நிரந்தரமாக்கப்பட்ட இந்த ரயில் இயங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications