Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளிக்கு ஊருக்கு போன மாதிரி தான்..நிமிடங்களில் காலியான ரயில் டிக்கெட்! முன்பதிவால் ஏமாந்த மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று முதல் தொடங்கி இருக்கும் நிலையில் பல ரயில்களில் ஒரு சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் முன்பதிவாகின. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் இரண்டு நிமிடங்களிலேயே வெயிட்டிங் லிஸ்ட் காட்டியது ரயில் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தென் மாவட்டங்கள் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கூலி வேலை என பல்வேறு தொழில்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Railway Diwali Reservation

இந்த நிலையில் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக திருச்சியை தாண்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை லட்சக்கணக்கை தாண்டும்.

சாலை மார்க்கமாக செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், ரயில் பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிவதும் சகஜம்தான். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக தற்போதே ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியன் ரயில்வேயை பொருத்தவரை பயணம் செய்யும் 120 நாட்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் நேற்று இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

மேலும் தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஊருக்குச் செல்லும் வகையில் நேற்று முதலும், நாள் ஊருக்குச் செல்லும் வகையில் இன்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. இதை அடுத்து அதிகாலை முதலே ரயில் பயணிகள் ஆர்வத்துடன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்தனர். ஆனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் டிக்கெட் முன்பதிவு ஒன்று முதல் இரண்டு நிமிடங்களிலேயே முடிந்து வெயிட்டிங் லிஸ்ட் காட்டியது. குறிப்பாக பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரவு நேர விரைவு ரயில் டிக்கெட் இரண்டு நிமிடங்களில் விற்று தீர்ந்தது.

காலை 8 மணிக்கு முன் பதிவு தொடங்கிய நிலையில் ஐஆர்சிடிசி மற்றும் பிற இணையதளங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர் .ஆனால் டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் விரைவு ரயில்களில் உள்ள இரண்டாம் வகுப்பு தூங்கும் கொண்ட ரயில் பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்து முடிவடைந்து வெயிட்டிங் லிஸ்ட்டை காட்டியது.

மேலும் சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிவடைந்தது. அது மட்டும் அல்லாமல் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், அனந்தபுரி, மலைக்கோட்டை விரைவு ரயில்களிலும் 200 முதல் 300 வரை வெயிட்டிங் லிஸ்ட் காட்டியது.

இதேபோல சென்னையில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு விரைவாக நிறைவடைந்தது. இது மட்டுமல்லாமல் பகல் நேரங்களில் பயணிக்கும் வைகை, பல்லவன், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் வெயிட்டிங் லிஸ்ட்டையே காட்டியது, அது மட்டுமல்லாமல் இரண்டாம் வகுப்பு மூன்றடுக்கு ஏசி ரயில் பெட்டிகளிலும் டிக்கெட்டுகள் விரைவாக விற்றுத் தீர்ந்ததோடு முதல் வகுப்பு டிக்கெட் முன்பதிவு விரைவாக நடைபெற்று வருகிறது,

தீபாவளி டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை பொதுமக்கள் அதிகம் ஐஆர்சிடிசி இணையதளத்தை நம்பி இருக்கின்றனர். இதன் மூலம் மட்டுமே சுமார் 85 சதவீத டிக்கெட் ரிசர்வேஷன் செய்யப்பட்டுள்ளதாகவும் அக்டோபர் 30ஆம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் இன்று தொடங்கிய நிலையில் அதே நிலை தான் இருக்கிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் கூடுதல் ரயில்களை இயக்க முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+