பேருந்து கட்டணம் உயர்கிறதா? பரவும் தகவல் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்பது குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்த நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு குறித்து மக்கள் கருத்து கூற கடந்த மாதம் அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், பேருந்து கட்டணம் உயர்வதாக அவ்வப்போது செய்திகள் பரவி வருகின்றன. பேருந்து கட்டணம் உயர்வு என தகவல் பரவி வரும் நிலையில் இதற்கு அமைச்சர் சிவசங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பேருந்து கட்டண உயர்வு என்ற தகவல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதையொட்டி சில அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசை பொறுத்தவரை பேருந்து கட்டண உயர்வு என்பது இல்லை என்பதில் தெளிவாக உள்ளோம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பேருந்து கட்டணம் உயர்வு என்று வதந்தி பரவுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை ஒவ்வொரு முறையும் மறுத்து வருகிறோம். பேருந்து கட்டண உயர்வு என்பது நிச்சயம் கிடையாது என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை தெரிவித்து இருக்கிறார்.
எனவே இப்போதும் அதனை உறுதிப்படுத்துகிறோம். ஏழை எளிய மக்கள் மீது சுமை ஏற்றப்படக்கூடாது என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கான சூழல் பலமுறை ஏற்பட்டபோதும் பேருந்து கட்டணத்தை ஏற்றக்கூடாது என்ற அறிவுரையை எங்களுக்கு வழங்கியிருக்கிறார். இப்போதும் தெளிவாக சொல்கிறேன்.. அரசு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை பேருந்து கட்டணம் நிச்சயம் இருக்காது" என்று தெரிவித்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications