Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென் கொரியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு போனது ஏன் .. டிஆர்பி ராஜா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட ஹ்வாசியுங் நிறுவனம், உலகின் மிக பிரபலமான பிராண்டான அடிடாஸின் முக்கிய சப்ளையர்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் அமைய இருந்தது. ஆனால் ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் என்ற ஆந்திர அரசின் சலுகை காரணமாக ஆந்திராவின் குப்பம் தொகுதிக்கு போய்விட்டது. இந்நிலையில்
தென்கொரியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு போனது ஏன் என அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட ஹ்வாசியுங் நிறுவனம், உலகின் மிக பிரபலமான பிராண்டான அடிடாஸின் முக்கிய சப்ளையர்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் ஸ்போர்ட்ஸ் காலணிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கிறது.
ஆரம்பத்தில், ஹ்வாசியுங் நிறுவனம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டானில் ரூ.1,720 கோடி முதலீட்டில் தனது உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டிருந்தது.

TRB Raja explains why the South Korean company Hwaseung went from Tamil Nadu to Andhra Pradesh

ஆனால் ஒரு ஏக்கர் ஒரு ரூபாயில் ஆந்திர அரசு நிலம் தருவதாக வாக்குறுதி அளித்து நிறுவனத்தை தட்டி தூக்கியது. அந்த நிறுவனம் ஆந்திராவின் குப்பத்தில் அமைகிறது. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளிடையே புயலை கிளப்பி உள்ளது. எதிர்க்கட்சிகள் முதல்வர் ஸ்டாலினையும், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவையும் விமர்சித்து கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் தென்கொரியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு போனது ஏன் என்று தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "முதலீட்டை மேம்படுத்துவது என்பது அன்றாட விளையாட்டு அல்ல. இது, ஒரு மாநிலத்திற்குத் தேவையான குறிப்பிட்ட துறைகள், அதனால் உருவாகும் வேலைவாய்ப்புகள், முதலீடு செய்யப்படும் பகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைக் காண்பது ஆகும்.

எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரான வளர்ச்சி எனும் இலக்கில்தான் எங்கள் கவனம் முழுமையாக உள்ளது. எனவே, சலுகைகள் வழங்குவதும், முதலீடுகள் தரையிறங்குவதும், நிறுவனம் எங்குத் தங்கள் ஆலையை அமைக்க விரும்புகிறது என்பதைப் பொறுத்து, பகுதிக்கு பகுதி மாறுபடும்."

"இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில், அரசுகள் தங்கள் பலம் மற்றும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கின்றன. சில அரசுகளுக்குப் (ஆந்திரா) வறண்ட நிலப்பரப்புகள் சலுகையாகக் கிடைக்கின்றன. ஆனால், மற்ற அரசுகளுக்கு அதிக மதிப்புள்ள நிலங்கள் உள்ளன. உருவாக்கப்படும் வேலைவாய்ப்பின் மதிப்பை ஒப்பிட்டுப் பார்க்காமல், சாதாரணமாக அந்த நிலங்களை வழங்கிவிட முடியாது." யதார்த்தமற்ற சலுகைகளை அளிப்பதில், நாங்கள் எந்தக் கட்டத்திலும் ஒரு போட்டிக்குத் தயாராக இல்லை."

தமிழகத்தின் தனித்துவமான பலம்

"தமிழ்நாடு, இந்தியாவிலேயே மிகவும் நம்பகமான மற்றும் அதிக தொழில்மயமாக்கப்பட்ட மாநிலமாகும். எங்களைப் போல ஒரு உற்பத்தி வல்லமை கொண்ட மாநிலம்வேறு இல்லை. எங்களுடைய மதிப்பை நாங்கள் அறிவோம், எங்களுடைய பலத்தை நாங்கள் அறிவோம், அதற்கேற்பவே நாங்கள் செயல்படுவோம்."

"எதிர்க்கட்சியின் சில கைப்பாவைகள், தமிழ்நாட்டின் நலன்களை முதன்மைப்படுத்தும் கடினமாக உழைக்கும் அரசு மற்றும் அதிகாரிகளைக் குறைத்து மதிப்பிடவும், மாநிலத்தின் உழைக்கும் மக்களை இழிவுபடுத்தவும் முனைகின்றனர். அவர்களின் விஷம் நிறைந்த வாயை, மேலும் அதிக முதலீட்டு அறிவிப்புகளால் அடைக்க நாங்கள் தேர்வு செய்கிறோம் " இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+