Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹாஸ்டல், சாலை, பார்க்கிங்.. மதிப்போ பல கோடி! 5 முத்தான அறிவிப்புகளை வெளியிட்ட டிஆர்பி ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் 5 முக்கியமாக அறிவிப்புகளை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டு உள்ளார்.

ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் தமிழ்நாடு வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் சிப்காட் தொழில் நண்பன் முதல் ஆண்டு சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) நிறுவப்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில், ஆறு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 28 தொழிற்பூங்காக்களை சுமார் 38,696 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தி, வளர்ச்சியடைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

TRB Raja made 5 important announcements in sipcot investors meet

இந்நிகழ்வில் 250 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் டிஆர்பி ராஜா, பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை நன்கு கவனித்து சிறந்த முறையில் தீர்வு காணுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

இந்த கூட்டத்தின் வாயிலாக நாங்கள் தொழில் முதலீட்டாளர்களின் கோரிக்கைகள் தீர்வு காணப்படும். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தொழில் பூங்காக்களில் மேலும் வசதிகள், உட்கட்டமைப்புகள் மேம்படுத்துதல் குறித்தும் விரிவான முறையில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவற்றின் மீது தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணப்படும். மேலும் சிப்காட் மூலம் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது:

1. 2023-24-ஆம் நிதி ஆண்டின் அறிவிப்பின்படி இருங்காட்டுக்கோட்டையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 200 தொழிலாளர் தங்குவதற்கான தங்குமிடம் 1.08 ஏக்கரில் கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

2. பிள்ளைப்பாக்கத்தில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 0.70 கி.மீ நீளத்திற்கு பிள்ளைப்பாக்கம் கிராம சாலை 8.5 மீட்டர் அகலத்திற்கு விரிவுப்படுத்தப்படும். மேலும், நீர்தேக்குவதற்கான கீழ்நிலைதொட்டி மற்றும் 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ரூ.4.85 கோடியில் கட்டப்படும்.

3. திருப்பெரும்புதூரில் சரக்கு வாகன நிறுத்தும் இடங்கள் மூன்று இடங்களில் ரூ.5.92 கோடியில் ஏற்படுத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். மேலும், ஒரகடத்தில் ரூ.5.39 கோடியில் ஏற்படுப்பட்டுள்ள சரக்கு வாகன நிறுத்தும் இடம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

4. வல்லம் வடகாலில் ரூ.14.10 கோடியில் வல்லக்கோட்டை மேட்டுப்பாளையம் கிராம சாலை 18 மீட்டர் விரிவுப்படுத்தப்படும். மேலும், மேட்டுப்பாளையம் கிராம சந்திப்பிலிருந்து வானூர்தி பூங்கா வரையிலான கிராம சாலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் 18 மீட்டர் அகலத்திற்கு விரிவுப்படுத்தப்படும்.

5. ஒரகடத்தில் 150 வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக 4 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.5.39 கோடியில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்படும். இது விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்."என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+