"பேசுவதே வேஸ்ட்!" விஜய் பற்றி கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்த டிஆர்பி ராஜா!
சென்னை: தவெக தலைவர் விஜய் பற்றிய கேள்வி வந்தவுடன் அமைச்சர் டிஆர்பி ராஜா சிரித்துவிட்டார். பிறகு விஜய் செய்யும் அரசியல் பாஜக ஸ்டைல் அரசியல் என்றும் தமிழக அரசியலில் குழப்பத்தை விளைவிக்க வந்தவர் தான் விஜய் என்றும் டிஆர்பி ராஜா சாடினார். மேலும், தமிழகத்தில் முதிர்ச்சியற்ற அரசியலுக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில், இப்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த முறை விஜய் புதிதாக அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அவரும் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக vs தவெக என்பதே போட்டி என்பது போல விஜய் பேசி வருகிறார். ஆனால், திமுக தலைவர்கள் பெரும்பாலும் விஜய்யை விமர்சிப்பதில்லை.. அதிமுக, பாஜக மற்றும் என்டிஏ கூட்டணியையே விமர்சித்து வருகிறார்கள்.

டிஆர்பி ராஜா
இதற்கிடையே சென்னையில் நடந்த ஆங்கில ஊடகமான என்டிடிவி நிகழ்ச்சியில் அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொண்டார். அதில் அவர் மாநிலத்தின் வளர்ச்சி தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் பேசினார். அப்போது விஜய் குறித்தும் அவரது அரசியல் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிஆர்பி ராஜா அளித்த பதில் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ்நாடு vs என்டிஏ
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, "தமிழ்நாடு முதல்வர் சொன்னது போலவே இந்த தேர்தல் தமிழ்நாடு vs என்டிஏ என்றே அமையும். ஒரு மாநிலம் தனது கொள்கை, தாய்மொழி, கலாசாரம் ஆகியவற்றில் உறுதியாக நின்றால் எந்தத் தாக்குதலையும் முறியடிக்கும் என்பதை இத்தேர்தல் உலகிற்கு உணர்த்தும். நிச்சயம் இதை தமிழ்நாடு இந்தியாவுக்குக் காட்டும். திராவிட மாடல் 2.0 லோட் ஆகிக் கொண்டு இருக்கிறது. அது சீக்கிரமே அமையும்" என்றார்.
வெடித்து சிரித்த டிஆர்பி ராஜா
அப்போது நெறியாளர், விஜய் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.. அவர் திமுகவைப் போலவே பேசுகிறாரே எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு டிஆர்பி ராஜா, "நீங்கள் கூர்ந்து கவனித்தால் புரியும். அவர் பேசுவது பாஜக பாலிடிக்ஸ்" என்றார். அவர் திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்துப் பேசுகிறாரே எனக் கேட்டதும் டிஆர்பி ராஜா அடக்க முடியாமல் சிரித்தார். மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய டிஆர்பி ராஜா, "தமிழக அரசியலைக் குழப்ப வந்திருக்கும் நபர்.. பாஜகவின் பீ டீம்.. சி டீம் எனக் கூட அழைக்க முடியாது. பாஜகவின் "இசட்" டீம் என்றுதான் அழைக்க வேண்டும். குழப்பம் விளைவிக்கும் சக்திகளைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி விவாதமே முக்கியம். ஆரோக்கியமான அரசியலே எங்களுக்கு வேண்டும்.
முதிர்ச்சியற்ற அரசியல்
தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியலை மக்கள் விரும்புகிறார்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா கூட வளர்ச்சிக்கான, அனைவரையும் உள்ளடக்கிய அரசியலையே விரும்பினர். பொதுமக்களில் ஒவ்வொருவரும் மாநில வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும்.. அதற்கேற்ப அவர்களை மேம்படுத்த வேண்டும் என்ற ஆரோக்கியமான வளர்ச்சி முன்னெடுப்பு தான் இருந்துள்ளது.
இங்கு முதிர்ச்சியற்ற அரசியலுக்கு இடமில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், பொய்களைப் பரப்பி சேற்றை வாரி வீசுவதற்குப் பதிலாக ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்க வேண்டும்" என்றார்.
-
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு












Click it and Unblock the Notifications