4வது ஸ்டேஜ்! இன்னும் சிகிச்சையே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள இப்படி ஆயிட்டே! பவதாரிணியின் உறவினர் கண்ணீர்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உயிரிழந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பவதாரிணியின் உறவினரான விலாசினி, 4வது ஸ்டேஜ் புற்றுநோய்.. இன்னும் சிகிச்சையே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள இப்படி ஆயிட்டே என கண்கலங்கியபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். கடந்த 5 மாதங்களாகவே சிகிச்சை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பவாதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்று இருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பவதாரிணி காலமானர். இலங்கையில் இருந்து நாளை அவரது உடல் தமிழகம் கொண்டு வரப்படுகிறது.

பாரதி பாடத்தில் மயில் போல பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றிருந்தார். மனதை வருடும் பல பாடல்களை பாடியுள்ளார் 47-வயதே ஆன பவதாரிணியின் திடீர் மறைவுக்கு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினரும் ஆழந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், பவதாரிணியின் உறவினரான விலாசினி, அவரது இறப்பு செய்தி கேட்டு கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளர். விசாலினி அந்த வீடியோவில் கண்ணீர் மல்க அவர் கூறியிருப்பதாவது:- 4-வது ஸ்டேஜ் புற்று நோய் பாதித்த பவதாரிணியை சிகிச்சைக்காக இலங்கை கொண்டு செல்வதாக கூறினார்கள். இன்னும் சிகிச்சை ஆரம்பிக்க கூட இல்லை என்று இப்போதுதான் சொன்னார்கள். என்னால இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாது.. ஏனெனில் நான் அமெரிக்காவில் இருக்கிறேன். போன் பண்ணி சொன்ன பிறகுதான் எனக்கே தெரியும்.. இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.












Click it and Unblock the Notifications