சேலம் மாம்பழங்கள் - அன்பானவர்களுக்கு பரிசளிக்க Tredyfoods.comமில் ஆர்டர் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கையாக கனிந்த மாம்பழங்களை சாப்பிடுவது ருசி மட்டுமல்ல உடலுக்கும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மாம்பழம் வாங்க கடை கடையாக ஏறி இறங்காமல் வீட்டில் இருந்தபடியே www.tredyfoods.com ஆர்டர் செய்தால் போதும் அல்போன்சா, இமாம்பசந்த், மல்கோவா, பீதர், சேலம் பங்களூரா, குதாதத் ருசியான மாம்பழங்கள் உங்கள் வீடு தேடி வரும்.

கோடை காலத்திற்கும் மாம்பழத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோடை நமக்கு அளித்த கொடைதான் மாம்பழம். வெயில் காலம் வரும் முன்பே மாம்பழ வாசனை நம்மை தேடி வந்து விடும். சுட்டெரிக்கும் வெயிலையும் ரசிக்க வைப்பது ருசியான மாம்பழங்கள்தான். லேசான புளிப்பு... கூடவே ரசிக்க வைக்கும் இனிப்பும் கலந்த கலவைதான் மாம்பழம். மாம்பழம் பற்றிய கதைகள் புராணங்களிலும் உள்ளன. தமிழ் கடவுளான முருகனுக்கு பிடித்தமானதும் மாம்பழம்தான். மாம்பழம் சூரியக்கடவுளின் மகளாக போற்றப்படுகிறது.

 Tredyfoods.com gives you a variety of mangoes for this summer season

பழங்களின் அரசன் மாம்பழம்:

பழங்களின் அரசனாக இருப்பதனால்தான் முக்கனிகளில் முதலிடம் மாம்பழத்திற்கு கொடுத்துள்ளனர் தமிழர்கள். இந்தியாவில் விளையும் மாம்பழம் தனி ருசி கொண்டது. மாவீரர் அலெக்சாண்டர் தனது நாட்டிற்கு திரும்பி சென்றபோது இந்தியாவில் இருந்து தன்னுடன் கூடை கூடையாக மாம்பழங்களையும் எடுத்துச்சென்றாராம். இன்றைக்கும் இந்திய மாம்பழங்களின் ருசிக்கு அடிமையானவர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். அவர்களுக்காகவே www.tredyfoods.com நிறுவனத்தினர் மாம்பழங்களை ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர்.

இயற்கையாக கனிந்த மாம்பழங்கள்:

இன்றைக்கு தரமான ருசியான ஒரிஜினல் நிறத்தோடு மாம்பழங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடிவதில்லை. மக்களின் மனதை புரிந்த tredyfoods.com நிறுவனத்தினர் தரத்திலும், ருசியிலும் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் மாந்தோப்புகளில் சென்று நேரடியாகவே மாங்காய்களைப் பெற்று இயற்கையான முறையில் கனிய வைத்து, உங்களின் இல்லங்களுக்கு பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்கின்றனர்.

 Tredyfoods.com gives you a variety of mangoes for this summer season

கோடையை இதமாக்கும் மாம்பழம்:

மாம்பழங்களின் வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. ருசிக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் மாம்பழங்களை கோடையில் அவசியம் சாப்பிட வேண்டும். பழமாக மட்டுமல்லாது வெப்பத்திற்கு இதமாக ஜூஸ் ஆகவோ சாப்பிடலாம். மாம்பழங்களில் நூற்றுக்கணக்கான வகைகள் இருந்தாலும் பொதுவாகவே பலரின் நினைவுக்கு வருவது மல்கோவா, அல்போன்சாதான். இது மட்டுமல்லாது சேலம் பங்களூரா, இமாம்பசந்த், குதாதத் என அனைத்து வகையான மாம்பழங்களும் மக்களின் தேவையறிந்து மூன்று கிலோ, ஐந்து கிலோ பெட்டிகளில் விற்பனை செய்கின்றனர்.

அன்பானவர்களுக்கு மாம்பழம் பரிசு:

மாம்பழங்களை அட்டைப்பெட்டியில் வைத்து அதன் மேல் பாதுகாப்பாக வைக்கோல் போர்வை போர்த்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். நாட்கள் செல்லச் செல்ல மாம்பழங்கள் கனிந்து அதன் வாசனை வீடு முழுவதும் பரவும். என்ன படிக்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறதா அப்போ உடனே www.tredyfoods.com மில் ஆர்டர் பண்ணுங்க. உங்களுக்கு மட்டுமல்ல உங்க உறவினர்களுக்கும் அன்பானவர்களுக்கு மாம்பழத்தை பரிசளியுங்கள்.

கார்ப்பரேட் புக்கிங் உண்டு:

வீட்டு தேவைக்கு மட்டுமல்லாது கார்ப்பரேட் நிறுவனங்கள் www.tredyfoods.com மில் மொத்தமாகவும் புக் செய்து ஊழியர்களுக்கு பரிசளிக்கலாம். இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும். போன் மூலம் புக் செய்ய 9787266666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது www.tredyfoods.com என்ற இணைய தள பக்கத்திற்கு சென்றும் ஆர்டர் செய்யலாம்.

 Tredyfoods.com gives you a variety of mangoes for this summer season

ஆயிரக்கணக்கான பொருட்கள் இருக்கு:

மாம்பழங்கள் மட்டுமல்லாது, இனிப்பு, கார பலகாரங்கள், இரும்பு பாத்திரங்கள், சோப்ஸ்டோன் பாத்திரங்கள், ஊறுகாய்கள், மூலிகைப் பொடிகள் என எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகம், இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் ஆர்டர் செய்யலாம் பத்திரமாக உங்களின் வீடு தேடி வரும். இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஸ்நாக்ஸ்கள், பாத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கோடை காலத்தையும் மாம்பழ சீசனையும் www.tredyfoods.com உடன் கொண்டாடுங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+