திருப்பதி - சென்னை ரூட்டும் இருக்கே.. வந்தாச்சு வந்தே மெட்ரோ ரயில்! ஜுலையில் சோதனை ஓட்டம்.. செம
சென்னை: வந்தே பாரத் ரயிலை தொடர்ந்து வந்தே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதில் ரயில்வே துறை ஆர்வமாக உள்ளது. இந்நிலையில் தான் வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மற்றும் அந்த ரயில் இயக்கப்படும் வழித்தடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் திருப்பதி - சென்னை வழித்தடமும் இடம்பெற்றுள்ளது.
தற்போது நாடு முழுவதும் வந்தோ பாரத் என்ற பெயரில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சொகுசு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலின் பெட்டிகள் வழக்கமாக உள்ள ரயில் பெட்டிகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும் மக்கள் இருக்கையில் இருந்தபடியே கண்ணாடி வழியாக ரயில் பாதையை சுற்றிய இடங்களை ரசிக்கலாம். மேலும் ரயிலில் சுழலும் இருக்கை, தானியங்கி கதவு, கேமரா உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. தற்போது இயங்கும் வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் இருக்கையில் அமர்ந்தபடி தான் பயணிக்க முடியும். இன்னும் ஸ்லிப்பர் கோச் வடிவிலான வந்தே பாரத் ரயில் நடைமுறைக்க வரவில்லை. அடுத்த மாதம் ஸ்லிப்பர் கோச் வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.
இதன் தொடர்ச்சியாக தான் இந்தியாவில் வந்தே மெட்ரோ ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இயங்கும் வந்தே பாரத் ரயில் என்பது நீண்ட தொலைவுக்கு இயங்கி வருகிறது. ஆனால் இந்த வந்தே மெட்ரோ ரயில் அருகருகே இருக்கும் இரு முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வந்தே மெட்ரோ ரயில் அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் தொலைவுக்குள் மட்டுமே இயங்கும்.
இந்த வந்தே மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைகள் வந்தே மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத் தான் வரும் ஜுலை மாதம் முதல் வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வந்தே மெட்ரோ ரயில் மூலம் நம் நாட்டில் 124 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலான திட்டத்தை ரயில்வே வைத்துள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் லக்னோ - கான்பூர், ஆக்ரா - மதுரா, டெல்லி, - ரிவாரி, புவனேஸ்வர் -பாலசோர், திருப்பதி - சென்னை உள்ளிட்ட வழித்தடங்கள் முக்கியமானவை. இந்த வழித்தடங்களில் ஏற்கனவே இருக்கும் தண்டவாளத்தில் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த வந்தே மெட்ரோ ரயில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைக்கப்படும். ஒருவேளை குறிப்பிட்ட ரூட்டில் அதிக பயணிகள் செல்லும்போது 16 பெட்டிகள் வரை அதிகரிக்கப்படும். மெட்ரோ ரயில் போன்று இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.
அதிகமானவர்கள் நின்று செல்ல வசதியாக ரயிலின் மையப்பகுதியில் அதிக இடைவெளி இருக்கும் வகையில் பெட்டிகள்
வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு முன்பதிவு செய்யாத பயணிகளும் இந்த ரயிலில் நேரடி டிக்கெட்டில் பயணிக்க முடியும். ரயில் முழுவதும் ஏசி வசதி இருக்கும். பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரயில்கள் மோதுவதை தடுக்கும் வகையிலும் ‛கவாச்' சிஸ்டம் (Kavach System) ரயிலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications