திருச்சி–சார்லப்பள்ளி சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு அறிவிப்பு
சென்னை: தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் திருச்சி மற்றும் சார்லப்பள்ளி இடையிலான 16 கூடுதல் சேவைகளை அறிவித்துள்ளது.. திருச்சியில் இருந்து வண்டி எண் 07616 ஜூன் 3 வரையிலும், சார்லப்பள்ளியில் இருந்து வண்டி எண் 07615 ஜூன் 2 வரையிலும் இயக்கப்படும்.. கோடை விடுமுறை கூட்ட நெரிசலைத் தவிர்க்க எடுக்கப்பட்ட இந்த முடிவால் தென் மாவட்ட பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
திருச்சி மற்றும் தெலங்கானா மாநிலம் சார்லப்பள்ளி இடையே இயக்கப்பட்டு வரும் கோடைக்கால சிறப்பு ரயில்களின் சேவை காலத்தை ஜூன் மாதம் வரை நீட்டித்து தெற்கு மத்திய ரயில்வே அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது..

திருச்சி சார்லப்பள்ளி சிறப்பு ரயில்
கோடை விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவும் அதீத பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் சேவைகள் வழங்கப்பட உள்ளன..
ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வண்டி எண் 07615 கொண்ட சார்லப்பள்ளி - திருச்சி சிறப்பு ரயில் ஏப்ரல் 14 முதல் ஜூன் 2 வரை இயக்கப்படும்.. இந்த ரயிலானது சார்லப்பள்ளியில் இருந்து ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை 18:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:35 மணிக்கு திருச்சியை வந்தடையும்..
சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
மறுமார்க்கத்தில் வண்டி எண் 07616 கொண்ட திருச்சி - சார்லப்பள்ளி சிறப்பு ரயில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.. இந்த ரயில் திருச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இரவு 21:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 21:30 மணிக்கு சார்லப்பள்ளியை சென்றடையும்.. இதன் மூலம் இரு மார்க்கங்களிலும் தலா 8 கூடுதல் சேவைகள் பயணிகளுக்கு கிடைக்கின்றன..
இந்த ரயில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காட்பாடி வழியாக இயக்கப்படுகிறது.
தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல் மற்றும் குண்டூர் வழியாக தெலங்கானாவை சென்றடைகிறது.. இந்த ரயிலில் முதல் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி, மூன்றாம் வகுப்பு ஏசி மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.. கோடை விடுமுறை பயணங்களை முன்கூட்டியே திட்டமிடும் பயணிகளுக்கு இந்த சேவை நீட்டிப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது..
ரயில்வே பயணிகள் மகிழ்ச்சி
சுமார் 1091 கிலோமீட்டர் தொலைவை கடக்கும் இந்த ரயில் மொத்தம் 25 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.. நீண்ட தூர பயணிகளுக்கு வசதியாக இந்த ரயில் கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது..
தெற்கு மத்திய ரயில்வேயின் இந்த அறிவிப்பால் தென் தமிழகத்தில் இருந்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. இப்போது இதற்கான முன்பதிவு அனைத்து ரயில் நிலையங்களிலும் மற்றும் ஆன்லைன் வாயிலாகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..
இடவசதி மற்றும் பயண நேரத்தை கருத்தில் கொண்டு பயணிகள் விரைவாக முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.. அடுத்த சில வாரங்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த சிறப்பு ரயிலுக்கான தேவை அதிகமாக இருக்கும் என ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது..!!!












Click it and Unblock the Notifications