திருச்சி கிழக்கு தொகுதி.. ஸ்டாலினை களமிறக்க தீவிரமாகும் கே.என்.நேரு.. பதிலுக்கு வியூகம் வகுத்த தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளால் உற்சாகம் அடைந்துள்ள திமுக, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ஸ்டாலினை களமிறக்க காய் நகர்த்த தொடங்கி இருக்கிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலினை வெல்ல வைக்க வேண்டும் என்று கே.என்.நேரு பேசி வரும் சூழலில், தவெக தரப்பிலும் புதிய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக 2ஆம் இடம் பிடித்தது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் செலவு செய்யாமல் முழுக்க முழுக்க திமுகவின் சாதனைகளையும், தவெகவின் சொதப்பல்களையும் மக்களிடம் கூறி வாக்குகள் கிடைத்தது ஸ்டாலினுக்கும் கூட புதிய எனர்ஜியை கொடுத்துள்ளது.

DMK Stalin KN Nehru

இதனால் அடுத்து இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்க ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். இதனிடையே மின் கொள்முதல் விவகாரம், எம்எல்ஏ-க்களுக்கு வழங்கப்பட உள்ள கார், விலைவாசி உயர்வு உள்ளிட்ட விஷயங்களை திமுக கையில் எடுக்க உள்ளது. அடுத்த 3 மாதங்களில் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.

அந்த வகையில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை களமிறக்க அக்கட்சியினர் சீனியர்கள் தீவிரமாக இருக்கின்றனர். ஸ்டாலின் போட்டியிட்டால் ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் திருச்சி கிழக்கு தொகுதியில் களமாடுவார்கள். அதேபோல் ஸ்டாலினுக்கு நிகரான வேட்பாளர் எந்தக் கட்சியும் இல்லை.

இதன் மூலமாக தவெகவினரின் உங்க அப்பாவை காணோம் என்ற விமர்சனத்திற்கும், "டாடி இஸ் ஹோம்" என்று பதிலடி கொடுக்க முடியும் என்று திமுக கணக்கு போடுகிறது. ஆனால் உதயநிதி ஸ்டாலினின் விருப்பம் அன்பில் மகேஷை திருச்சி கிழக்கில் களமிறக்க வேண்டும் என்பது தான். அதேபோல் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஸ்டாலின் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.

அதேபோல் ஸ்டாலினை களமிறக்க சீனியர்கள் துடிப்பதற்கு வேறு சில காரணங்களும் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. இடைத்தேர்தலில் சீனியர்கள் மற்றும் ஜுனியர்கள் களத்தில் பணியாற்றியது திமுகவுக்கு சாதகமாக இருந்தது. இதனால் இதே பாணியில் பணியாற்றினால், சீனியர்கள் தங்களின் பதவியை கட்சி மறுசீரமைப்பில் இருந்தும் காப்பாற்றி கொள்ள முடியும். அதேபோல் சட்ட்சபையிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என்று திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.

ஆனால் கொளத்தூர் மக்களுக்கு கும்பிடு போட்டு நன்றி தெரிவித்த ஸ்டாலின், இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்படுகிறது. இருப்பினும் தவெக தரப்பில் புதிய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பாக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் குப கிருஷ்ணன் ஆகியோர் தங்களின் வாரிசுகளுக்கு சீட் எதிர்பார்த்திருக்கின்றனர். ஏற்கனவே இரு தரப்பும் தேர்தல் பணிகளையும் தொடங்கி தீவிரமாக செய்து வருகிறது.

ஆனால் ஸ்டாலின் களமிறங்கினால், சூழல் மொத்தமாக மாறிவிடும். முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், அங்கு தவெகவுக்கு கவுரவ பிரச்சனையாக மாறி இருக்கிறது. இதனால் ஸ்டாலினுக்கு எதிராக திருமாவளவனை களமிறக்கலாமா என்று சில ஆலோசனைகள் நடந்திருக்கின்றன. ஆனாலும் முதல்வர் விஜய் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+