பொன்னியின் செல்வன் எஃபெக்ட்! சோழ மன்னர்களின் பெயர் கொண்டவரா நீங்க? கவுரவிக்கும் ஹக்கீம் பிரியாணி!
சென்னை: சோழ மன்னர்களின் பெயர்களை கொண்டவர்களுக்கு இலவசமாக பிரியாணி விருந்து வைத்து கவுரவிக்கவுள்ளது கே.எம்.எஸ்.ஹக்கீம் பிரியாணி குழுமம்.
சுந்தரச்சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்ய கரிகாலன், வந்நியத் தேவன், குந்தவை, பூங்குழலி ஆகிய பெயர்களில் உங்கள் பெயர் இருந்தால் ஆதார் அட்டையுடன் நீங்கள் நேராக செல்ல வேண்டிய இடம் ஹக்கீம் பிரியாணி உணவகம்.
திருச்சி, சென்னை என இரண்டு இடங்களில் ஹக்கீம் பிரியாணி உணவகம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் உருவாக்கத்தில் திரைக்கு வந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் தொடர்பான பேச்சுக்கள் தான் இன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் திருச்சியை சேர்ந்த பிரபல பிரியாணி உணவக குழுமமான கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி குழுமமானது, சோழ மன்னர்களின் பெயர்கள் சூட்டியவர்களை கவுரவிக்க திட்டமிட்டு புதுமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சோழ மன்னர்கள்
அதாவது சுந்தரச்சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்ய கரிகாலன், வந்நியத் தேவன், குந்தவை, பூங்குழலி ஆகிய பெயர்களை கொண்டவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி பிரியாணி வழங்கி கவுரவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு எதுவையும் ஹக்கீம் பிரியாணி நிர்ணயிக்கவில்லை. ஆனால் ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என்ற ஒற்றை நிபந்தனையை மட்டும் முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில் அந்த உணவகம் விதித்துள்ளது.

2 பெயர்கள் சாத்தியம்
அருள்மொழி வர்மன், பூங்குழலி, ஆகிய இரண்டு பெயர்கள் மட்டும் இன்றளவும் தமிழகத்தில் அதிகளவு சூட்டப்பட்டு வருவதால் அந்த 2 பெயர்களில் உள்ளவர்கள் ஹக்கீம் பிரியாணி உணவகத்தில் கட்டணமில்லா பிரியாணி சாப்பிட படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி சுந்தரச்சோழர், ஆதித்ய கரிகாலன், வந்நியத் தேவன், குந்தவை, ஆகிய பெயர்களை கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஹக்கீம் பிரியாணி
திருச்சி, சென்னை என இரண்டு இடங்களில் ஹக்கீம் பிரியாணி உணவகம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் உரிமையாளாரன திருச்சி கே.எம்.எஸ்.ஹக்கீம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் முக்கியப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications