ஆடு மேய்க்கும் அப்பா.. ’கேட்’ தேர்வில் சாதித்த திருச்சி மாணவி! கல்வியால் எதையும் எட்ட முடியும்
சென்னை: திருச்சி அருகே உள்ள தொட்டியம் பகுதியில் தனியார் என்ஜினியரிங் கல்லுாரியில் படித்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளியின் மகள், 'கேட்' நுழைவு தேர்வில் தேசிய அளவில், 105-வது இடம் பிடித்து சாதித்துள்ளார். வறுமை நிலையிலும் தனது கல்வி என்னும் ஆயுதத்தால் மாணவி சாதித்து இருப்பது பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சி அ அடைய வைத்துள்ளது.
கல்வி என்னும் ஆயுதத்தால் எத்தகைய உயரத்தையும் எட்டலாம் என்று சொல்வதை நீருபிக்கும் வகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மாணவ - மாணவிகள் சாதித்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் சின்ன கல்வராயன் மலையை சேர்ந்த பழங்குடியின பெண் ராஜேஸ்வரிக்கு ஐஐடியில் சீட் கிடைத்துள்ளது.
அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து ஜெ.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெற்று பழங்குடியின சமூகத்தில் இருந்து முதல் முறையாக ஐ.ஐ.டி.யில் படிக்க செல்கிறார். இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் வறுமையான சூழலிலும், கேட் தேர்வில் சாதித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-

ஆடு மேய்க்கும் தொழில்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த நீலி வனத்தான். இவரது மனைவி அமிர்தவல்லி. இந்த தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ளனர். நீலிவனத்தான் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இதில் 2-வது மகள் விஜி. இவர் என்ஜினியரிங் பட்டதாரி தகுதித் தேர்வு எனப்படும் கேட் தேர்வில் இந்திய அளவில் 105-வது இடத்தைப் பிடித்து சாதித்து இருக்கிறார் விஜி.
ஐஐடி கரக்பூரில் நிலம் மற்றும் நீர்வளப் பொறியியல் பிரிவில் உயர்கல்வி பயில விஜிக்கு இடம் கிடைத்துள்ளது. ஆடு மேய்க்கும் தொழில் செய்தும், விவசாய கூலி வேலையும் செய்து 3 மகள்களையும் படிக்க வைத்துள்ளார். மாணவி விஜி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்தார்.
4 டூ 5 மணி நேரம் படித்தேன்
கடந்த 2021-ம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின், 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இவர் தொட்டியம் கல்லுாரியில் வேளாண் பொறியியல் துறையில் இளநிலை பயின்றார். இந்த நிலையில்தான் தற்போது கேட் தேர்வில் அகில இந்திய அளவில் சாதித்து இருக்கிறார். கேட் தேர்வில் சாதனை படைத்தது குறித்து விஜி கூறியதாவது:-
எனது பெற்றோர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். எனது இந்த வெற்றிக்கு கல்லூரி நிர்வாகம், துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் வழி காட்டினர். தினமும் 4 முதல் 5 மணி நேரம் நேரம் ஒதுக்கி படித்தேன். தேவையான புத்தகங்கள் இதர பொருட்கள் அனைத்தையும் பேராசிரியர்கள் வழங்கினர்.
பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்
கேட் தேர்வு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி அவர்கள் அளித்த வழிகாட்டுதலால் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதன் பின்னர் எனது முழு முயற்சியையும் போட்டு இன்று வெற்றி கண்டுள்ளேன். தற்போது ஐஐடியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆடு மேய்த்து என்னை படிக்க வைத்த எனது பெற்றோருக்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன். எனது உயர்கல்வி வாய்ப்பால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்" என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications