"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா!
சென்னை: அண்ணாமலையை சட்டசபைக்குள் வரவிடக்கூடாது என எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் சேர்ந்து போட்ட திட்டம் தான் இது என பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். அண்ணாமலைக்கு சீட் தராதது பற்றி பல்வேறு தகவல்கள் உலவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்காகவே அண்ணாமலைக்கு நயினார் நாகேந்திரன் சீட் தர விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதத்துக்கு காரணம் அண்ணாமலை தான். அவரால் தான் வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதம் என பாஜகவிற்குள் பலருக்கும் வருத்தம் இருந்தது. நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை, இந்த நபருக்கு இந்த சீட் என பிளான் போட்டுத்தான் வாங்கினார். அண்ணாமலைக்கு சீட் கொடுக்கக்கூடாது என்பதுதான் நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் எண்ணம்.

நயினார் நாகேந்திரன், பாஜக மாநில தலைவராக செயல்படவில்லை. நாளை எடப்பாடி பழனிசாமியின் எண்ணப்படி தான் செயல்படுகிறார். எடப்பாடி பழனிசாமி தமக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் கிடைக்க வேண்டும் என்றுதான் செயல்பட்டார். இந்த 2 பேருமே அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என நினைத்தனர்.
அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட போது, ராஜ்யசபா எம்.பி பதவி, மத்திய அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்தார். தேசிய பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், அமித் ஷாவோ, மாநில அரசியலில் அண்ணாமலையை வைத்துக்கொள்ள விரும்பினார்.
அண்ணாமலை எப்போதும் சுயநலமாகவே செயல்படுபவர். அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்குக் கூட உதவிகள் செய்யாதவர். இப்போது அவரே வினையை அனுபவிக்கிறார். பாஜக வலுவாக இல்லாத இடங்களை பெற்று, மறைமுகமாக பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறார் நயினார் நாகேந்திரன்.
அண்ணாமலை, பல இளைஞர்களை ஊக்குவித்தார். அவரால் ஈர்க்கப்பட்டு பலர் கட்சிக்குள் வந்தனர். எஸ்.ஜி.சூர்யா, வினோஜ் பி செல்வம் ஆகியோர் தேர்தலில் நிற்க வேலை பார்த்து வந்தனர். ஆனால், அவர்களுக்கு எல்லாம் சீட் கிடைக்கவிடாமல் செய்துவிட்டனர்." எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளை பெற்ற பாஜக, இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டின்போதே பாஜகவுக்கு, அதிமுக வெற்றி வாய்ப்பு இல்லாத பெரும்பாலான தொகுதிகளை தள்ளிவிட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதன் காரணமாக, அதிமுகவிடம் சில தொகுதிகளை மாற்றி வாங்க பாஜக முயற்சித்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு உடனடியாக வேட்பாளர்களையும் அறிவித்து ஒரு வாரமாக தொடர்ந்து பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. இந்நிலையில் நேற்று தான் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் அண்ணாமலை பெயர் இல்லாதது பாஜகவிற்குள் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications