கூப்பிடுற இடத்துக்கெல்லாம் வரத்துக்கு அவரை என்ன நினைச்சீங்க?- காயத்ரிக்கு திருச்சி சூர்யா பதில்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துகளை பதிவிடும் நடிகை காயத்ரி ரகுராமுக்கு பாஜகவில் இருந்து வெளியேறிய திருச்சி சூர்யா பதில் அளித்துள்ளார். காயத்ரி ரகுராமை ஒருமையில் சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார் திருச்சி சூர்யா.
தமிழ்நாடு பாஜகவில் சர்ச்சை முகமாக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு பாஜக தலைமையுடன் பகிரங்கமாகவே மோதி வந்தார். உட்கட்சி பிரச்சனைகளை ட்விட்டர் உள்ளிட்ட பொதுவெளிகளில் பேசி வந்தார்.

பாஜக நிர்வாகியாக இருந்த திருச்சி சூர்யா மற்றும் அக்கட்சியின் மற்றொரு நிர்வாகி டெய்சி இடையேயான ஆபாச ஆடியோ சர்ச்சையிலும் காயத்ரி ரகுராம் பகிரங்கமாக கருத்துகளை தெரிவித்தார். திருச்சி சூர்யா மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுவெளியில் பதிவிட்டார். இதனால் காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யபப்ட்டார்.
இதனைத் தொடர்ந்தும் தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; வீடியோ - ஆடியோவை வைத்து மிரட்டும் கலாசாரம், தமிழ்நாடு பாஜகவில் அதிகரித்துவிட்டது. வார் ரூம் ஒன்றை வைத்து தமிழ்நாடு பாஜக தலைமைக்கு எதிரானவர்களை இழிவுபடுத்துகிற போக்கு தொடருகிறது என இடைவிடாமல் கொந்தளித்தார் காயத்ரி ரகுராம். இதற்கு தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பகிரங்கமாகவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தின் உச்சமாக, தமிழ்நாடு பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து விசிக, திமுக அல்லது தம்மை அழைக்கும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன் எனவும் காயத்ரி ரகுராம் கூறியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது என கூறியிருந்தார்.
மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா எனவும் காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார். இதற்கு பாஜகவில் விருந்து விலகிய திருச்சி சூர்யா தந்துள்ள பதில்: நீ கூப்பிடுற இடத்துக்கெல்லாம் வரத்துக்கு அவரை என்னன்னு நினைச்சீங்க? தைரியம் இருந்தால் அண்ணன் @Veera284 மாதிரி உதயநிதியை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு இல்லை என்றால் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் முருகனை எதிர்த்து நிற்பேன் என்று சொல்ல. இவ்வாறு திருச்சி சூர்யா பதிவிட்டுள்ளார்.

இதற்கு காயத்ரி ரகுராம் அளித்த பதில்: அண்ணாமலைக்கு இப்போது என்னுடன் பேசத் தைரியம் இல்லை, ராஜினாமா செய்த அடி ஆளை அனுப்புகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு எதிராக அவர் போட்டியிட முடியுமா அல்லது முடியாதா என்று கேளு. இது ஆம் அல்லது இல்லை என்ற கேள்வி. விவாதிக்க எதுவும் இல்லை.
இதற்கு திருச்சி சூர்யா தந்த மற்றொரு பதில்: நான் ராஜினாமா செய்த அடியாள் என்றால் நீ டிஸ்மிஸ் செய்யப்பட்ட பைத்தியம். நீ போய் நிற்கிற இடத்தில் எல்லாம் அவரும் வந்து நிற்பாரா? நீ தான் என் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா என்னை நேரில் சந்திக்க யாருக்கு தைரியம் இருக்கிறது என்று ஒரு பேட்டியில் கேட்ட? எனக்கு இருக்கிறது தங்களுக்கு?
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications