தமிழிசை அக்கா! நீங்க பாஜக தலைவரா இருந்தப்ப ஈ, காக்கா கூட கட்சில சேர வரலை.. திருச்சி சூர்யா தாக்கு
சென்னை: குற்ற பின்னணி உள்ளவர்கள் பாஜகவில் சேர்க்கப்பட்டது என்பது உங்களுடைய பரிந்துரையில் மாநில தலைவராக இருந்த எல்.முருகன் காலகட்டத்தில்தான் என்றும் அதற்கான பட்டியலை நான் தருகிறேன் என்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றதும்தான் பாஜகவில் ரவுடிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக தமிழிசை சவுந்திரராஜன் அளித்த பேட்டிக்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதுகுறித்து திருச்சி சிவா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அக்கா வணக்கம் @DrTamilisai4BJP
தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா?
குற்ற பின்னணி உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான் வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன். கட்சியின் வளர்ச்சியையும் தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம்.
அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அதிகம் இடங்கள் ஜெயித்திருக்கும் என்று தேசியத்தின் முடிவுக்கு எதிரான உங்கள் கருத்து கட்சி கட்டுப்பாடா?
பாஜகவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாக ஆகியது இது கட்சி கட்டுப்பாடா?
இப்படி எல்லாம் கட்டுப்படாத முன்னால் மாநிலத் தலைவரின் கருத்திற்கு அமைதி காக்கும் தேசியம் அதற்கு எதிர் வினையாற்றும் எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதை சந்திக்க தயாராக உள்ளோம். பதவிக்காக நாங்கள் இந்த கட்சியில் இல்லை அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம். இவ்வாறு திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று தற்போது 2024 லோக்சபா தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தமிழகத்திலிருந்து இரட்டை இலக்கத்தில் பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்வர் என அண்ணாமலை ஒவ்வொரு முறையும் சூளுரைத்தார். இதையடுத்து அந்த தேர்தலில் பாஜக சார்பில் 19 பேர் களமிறக்கப்பட்டனர். மற்ற இயக்கங்களை சேர்ந்த 4 பேர் என்டிஏவுடன் கூட்டணி அமைத்து தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் போட்டியிட்ட ஒருவர் கூட வெல்லவில்லை. இது தற்போது விவாத பொருளாகியுள்ளது. தற்போது முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் இடையே பெரும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழிசை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் நான் கட்சிக்காக கடுமையாக உழைப்பேன், உள்கட்சி ஐடி நிர்வாகிகளை கடுமையாக எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன்.
தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன். ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே வந்தேன் என சிலர் கேட்கிறார்கள். கட்சியினருக்கு நான் கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டுவிட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை ? என கேள்வி எழுப்பியிருந்தார்.
அது போல் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் நிச்சயம் வென்றிருக்கலாம் என தமிழிசை கூறியதை அடுத்து அவரை வடஇந்தியாவுக்கு ஆளுநராக அனுப்புங்கள். அண்ணாமலையை தனியாக செயல்பட விடமாட்டார் என்றெல்லாம் தமிழிசை மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் அவர் தி இந்து தமிழுக்கு அளித்த பேட்டியில் கட்சியில் எனக்கு சின்ன வருத்தம் உள்ளது. எனக்கென்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. நான் சிலரை கட்சிக்குள் அனுமதிக்க மாட்டேன். கட்சியில் இருக்க சிலருக்கு அனுமதி இல்லை. அதாவது சமூக விரோத ரவுடிகள் போல் இருப்பவர்களை கட்சிக்குள் விடவே மாட்டேன்.
ஆனால் இப்போது அப்படி கட்சியில் சிலர் சேர்க்கப்பட்டு உள்ளனர். நான் அதற்கெல்லாம் கட்டுப்பாடு விதித்தேன். கட்சியில் இப்போது ரவுடிகள் சமீப காலங்களில் சேர்ந்து உள்ளனர். கட்சி நன்றாகத்தான் செயல்படுகிறேன். கட்சியில் கடுமையாக உழைக்கும் தலைவர்களுக்கு பதவி தர வேண்டும். மாநில தலைவர் சரியாக பணியாற்றுகிறார். அவரின் ஸ்டைல் வேறு. ஆனால் சொல்கிறேன்.. நானெல்லாம் இதை அனுமதிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி












Click it and Unblock the Notifications