"அண்ணாமலை கருத்தை தனிப்பட்ட கருத்தென கூற நீங்கள் யார்?" நயினார் நாகேந்திரனுக்கு சூர்யா சிவா கேள்வி!
நயினார் நாகேந்திரனுக்கு திருச்சி சூர்யா பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்து, அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறுவதற்கு நீங்கள் யார் என நயினார் நாகேந்திரனுக்கு பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகியான திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.

அண்ணாமலை கருத்துக்கு எதிர்ப்பு?
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி பதிவிட்டு வரும் ட்விட்டர் கருத்துகள், அண்ணாமலை பேசிய கருத்துகளை உறுதிபடுத்தியுள்ளது. அண்ணாமலையின் கருத்துக்கு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளே எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நயினார் நாகேந்திரன் கருத்து
இதனிடையே பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியது அவரின் சொந்த கருத்து என்று அக்கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதிலளித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணி நிலைப்பாட்டை தேசிய தலைமையே முடிவு செய்யும். அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதை தான் செய்வோம் என்று தெரிவித்தார்.

திருச்சி சூர்யா பதிலடி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதை அவரின் தனிப்பட்ட கருத்து என்று பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகியும், அண்ணாமலை ஆதரவாளருமான திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்துள்ளார்.

தலைவர் பதவி மீது ஆசை
அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து அவரது சொந்த கருத்து என்று பேசுவதற்கு நீங்கள் யார்? திமுக அமைச்சர்களிடம் காரியத்திற்காக நிற்கும் நயினார் நாகேந்திரன் அண்ணாமலைக்கு மரியாதை கொடுக்கவில்லை. தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு நயினார் நாகேந்திரன் செய்யும் செயல் ஊரறிந்தது என்று கூறியுள்ள திருச்சி சூர்யா, முக்குலத்தோர் எதிர்ப்பை அண்ணாமலைக்கு எதிராக உருவாக்க முயற்சிக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக!












Click it and Unblock the Notifications