வீட்டுக் கடனை விரைவாக அடைக்க எளிய வழி.. வெறும் 10000 எடுத்து வைத்தாலே பல லட்சம் லாபம்
சென்னை: வீட்டுக் கடன் வாங்க போகிறவர்கள் அல்லது வீட்டுக் கடன் வாங்கியவர்கள் கடன் தவணையை கட்டும் போது சின்னதாய் மாற்றி யோசித்தால் பல லட்சம் ரூபாய் லாபம் பெற முடியும். கடன் வாங்கிய ஆரம்பம் முதலே இந்த ட்ரிக்ஸை பின்பற்றினால், மிக எளிதாக கடனை அடைத்து விட முடியும். அதேபோல் ஒவ்வொரு வருடமும் மிகப்பெரிய அளவில் கடன் வட்டியை குறைத்துவிட முடியும். அந்த எளிய பார்முலாவை இந்த பதிவில் பார்ப்போம்.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 6.50ல் இருந்து 25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25ஆக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி குழுவின் 6 உறுப்பினர்களும் ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் குறைக்க ஒருமனதாக ஒப்புதல் அளித்தார்கள்.

இதனால், ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைந்திருக்கிறது. வட்டி குறைப்பால், வங்கிகளில் வீடு, வாகன, தனிநபர் கடன்கள் பெற்றவர்களுக்கு வட்டி விகிதம் விரைவில் குறைகிறது. ஒரே ஆண்டில் இதுவரை 0.50 புள்ளிகள் வரை வட்டி குறைந்திருப்பதால் பலருக்கும் லட்சக்கணக்கில் லாபம் கிடைத்திருக்கும். வட்டி விகிதம் 8.25ல், 8.00 ஆக எப்போது வேண்டுமானாலும் முக்கிய வங்கிகள் குறைக்க வாய்ப்பு உள்ளது.
அசல் வட்டி குறைக்க வழி
வீட்டுக் கடன் வாங்கிய பலர், என்ன இஎம்ஐ தொகையை அந்த தொகையை அப்படியே ஒவ்வொரு மாதமும் சரியாக கட்டுவார்கள். கடைசியில் 15 வருடங்கள் கழித்து போய், வட்டி, அசல் எவ்வளவு குறைந்திருக்கிறது என்று பார்க்கிறார்கள்.. ஆனால் அசல் அப்படியே தான் இருந்திருக்கும். வட்டி மட்டுமே பல வருடங்களாக கட்டி வந்திருப்பார்கள்.. 15 வருடங்களுக்கு பிறகு போய் கடனை ஒரே தவணையில் அடைக்க போனால் வாங்கிய அசலில் பெரும் தொகையை அப்படியே கட்ட சொல்லுவார்கள். இதனால் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் வேறுவழியின்றி எந்த லாபமும் இல்லையே விரக்தியில், தவணை முடியும் வரை கடனை கட்டுவார்கள்.
10 ஆயிரம் பணம்
ஆனால் இப்படி செய்யாமல், வீட்டுக் கடன் வாங்கியவர்கள், கடன் வாங்கிய முதல் நாளில் இருந்தே கடன் இஎம்ஐ தொகைக்கு தனியாக பணம் ஒதுக்குவது போல், ஒவ்வொரு மாதமும் வங்கியில் பணத்தை 10 ஆயிரம் முதல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர்க்க வேண்டும். பின்னர் முதல் ஆண்டு இறுதியில் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டிலும் 1.20 லட்சம் தொடங்கி, 1.50 லட்சம் வரை சேமித்து அப்படியே அந்த தொகையை வங்கியில் கட்டலாம்..
10 வருடம் முன்பே அடைக்கலாம்
இப்படி ஒவ்வொரு ஆண்டும் கட்டி வந்தால் 20 வருடத்தில் முடிய வேண்டிய கடன் 10 வருடத்திற்கு முன்பே கூட முடியும். சிலருக்கு அவர்கள் எடுத்துள்ள கடன் தொகையை பொறுத்து 5 வருடங்களில் கூட கடன் முடிந்துவிடும். கடன் வாங்கிய முதல் ஆண்டில் இருந்தே கட்டுவது அல்லது இரண்டாம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் இஎம்ஐயை அதிகரித்து கட்டுவது மிகப்பெரிய லாபமாக இருக்கும்.. வட்டி அப்படியே பாதியாக குறைந்துவிடும். மிக எளிதாக வீட்டுக்கடனை அடைத்துவிடலாம். பல லட்சம் ரூபாயை சேமிக்க முடியும்.
சேமிப்பு பார்முலா
சேமிப்பு பார்முலாவும் இதேதான். ஒருவர் 25 வயதில் வேலைக்கு சேர்ந்த உடன் சேமிக்க தொடங்கினால், அவர் 40 வயதில் நினைத்தே பார்க்க முடியாத தொகையை கையில் வைத்திருப்பார். ஆனால் 40 வயதில் தான் சேமிக்க தொடங்குகிறார் என்றால், அந்த அளவிற்கு சேமிக்க முடியாது. பணம் இரு மடங்கு, மூன்று மடங்காக மாற வேண்டும் என்றால், இளமையிலேயே அல்லது ஆரம்பத்தில் இருந்தே சற்று மாற்றி யோசிக்க வேண்டும் அவ்வளவு தான்... கடைசி நேரத்தில் அல்லது இறுதி காலத்தில் போய் எதுவும் செய்ய இயலாது..












Click it and Unblock the Notifications