மும்மொழிக் கொள்கை விவகாரம்.. கோலம் போட்டு பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த அயப்பாக்கம் மக்கள்
சென்னை: தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயலும் பாஜக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை அயப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் சர்வ சிக்ஷ அபியான் என்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால், பாஜக அரசு தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய 2 ஆயிரத்து 190 கோடியை தராமல் இழுத்தடித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் டெல்லியில் மத்திய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய நிதி குறித்து பேசினர். ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி தரப்படும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தியை ஏற்காததால் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய 2,190 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை. அந்த நிதியை உபி, குஜராத் போன்ற மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒருபோதும் மும்மொழிக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மும்மொழிக் கொள்கையை கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளார்.
தற்போது மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயலும் பாஜக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை அயப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஸ்டாப் இந்தி இம்போசிஷன், இந்தி திணிப்பு எதிர்ப்பு, தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாசகங்களை வரைந்தும், பல்வேறு வண்ணக் கோலங்களை இட்டும், மும்மொழிக் கொள்கை மட்டும், இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications