கவனம்பெற்ற திரிஷாவின் போஸ்ட்.. விஜய் மாநாட்டுக்கு நடுவே இன்ஸ்டாவை கவனிச்சீங்களா! ஒருவேளை இருக்குமோ
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். தமிழகத்தில் 2026ம் ஆண்டில் நடக்கும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து நடிகர் விஜய் கட்சியை தொடங்கி உள்ளார். மேலும் கட்சி தொடங்கியபோதே அதனை விஜய் வெளிப்படையாக கூறியிருந்தார்.

இதன்மூலம் 2026 தமிழக சட்சடபை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. நடிகர் விஜயின் கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஜய் விரைவில் சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். தற்போது அவர் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தான் அவரது கடைசி படமாகும். அதன்பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார். மாவட்டந்தோறும் புதிய நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார். சமீபத்தில் கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநில மாநாட்டை நாளை நடத்துகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் வி சாலையில் நாளை மாலை அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் நடிகர் விஜய் பங்கேற்று கட்சியின் கொள்கைகள் பற்றி பேச உள்ளார். இதுதவிர அவர் மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தை ஆளும் திமுகவுக்கு எதிராக பேசலாம் என்பதால் நாளை நடக்கும் அரசியல் மாநாடு அனைத்து தரப்பினரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி நடிகர் விஜயின் அரசியல் கட்சி மாநாட்டில் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. இதுதவிர பல திரைப்பிரபலங்கள் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நாளைய அரசியல் மாநாடு என்பது அனைவரின் மத்தியிலும் அதிக கவனம் பெற்றுள்ளது.
இதற்கிடையே தான் நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள ஸ்டேட்டஸ் தற்போது விவாதமாகி உள்ளது. அதாவது காரில் செல்லும் திரிஷா கையில் முருக்கு ஒன்றை ஜன்னலுக்கு வெளியே நீட்டி போட்டோவாக போட்டுள்ளார். அதோடு அந்த ஸ்டேடஸின் மேல்புறத்தில் ‛Thenkuzhal in' என்று ஆங்கிலத்தில் எழுதி அதன் அருகே ஸ்பெயின் நாட்டின் கொடியை பதிவிட்டுள்ளார். அதோடு ‛ஜெய் ஹோ' என்ற பாடலை அவர் பின்னணி இசையாக சேர்த்துள்ளார்.
இதில் முக்கியமானது என்னவென்றால் அந்த ஸ்பெயின் நாட்டின் கொடி தான். அந்த கொடி பார்க்க நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை போல் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஸ்பெயின் கொடியை பார்த்து தான் நடிகர் விஜய் தனது கட்சிக்கான கொடியின் நிறத்தை தேர்வு செய்ததாக எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். இத்தகைய சூழலில் நடிகை திரிஷாவின் இந்த பதிவு என்பது அவர் நடிகர் விஜயின் கட்சிக்கு ஆதரவாக போட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இது தற்போது கவனம் பெற்றுள்ளது.

நடிகை திரிஷா நடிகர் விஜயுடன் கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். அதன்பறிகு கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இணைந்து ‛லியோ' திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. தற்போது திரிஷா நடிகர் அஜித் குமாருடன் ‛குட் பேட்' அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அஜித்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடக்கும் நிலையில் திரிஷா அங்கு சென்று பங்கெடுத்து வந்தார். தற்போது ஸ்பெயின் நாட்டிலிருந்து திரிஷா சென்னை திரும்பி உள்ளார். அவர் நாளை நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பாரா? என்பது இன்னும் தெரியாத நிலையில் அவர் வைத்த இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் தான் தற்போது விவாதமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications