நடிகை த்ரிஷாவின் ‘எக்ஸ்’ சமூக வலைதள கணக்கில் ஹேக்கர்கள் அட்டூழியம்! கிரிப்டோ கரன்சி பதிவால் ஷாக்!
சென்னை: நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் திடீரென கிரிப்டோ கரன்சி குறித்த பதிவு வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
6 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட நடிகை த்ரிஷாவின் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கம், சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. முதலில் கிரிப்டோ கரன்சி குறித்து பதிவு ஒன்று த்ரிஷாவின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட நிலையில், சில நிமிடங்களிலேயே அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

"முதல் முறையாக இதுபோன்ற ஒன்றைச் செய்வதில் நான் உற்சாகமடைகிறேன். நான் எனது சொந்த கிரிப்டோகரன்சியை உருவாக்கி உள்ளேன். இப்போது அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. லவ் யூ ஆல்..." என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த கிரிப்டோ கரன்சியை பெறுவதற்கான லிங்க் ஒன்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, த்ரிஷாவின் எக்ஸ் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவு பதிவிடப்பட்டுள்ளது. இதுவும் கிரிப்டோகரன்சி குறித்த பதிவு தான். "என்னுடைய புதிய கிரிப்டோகரன்சி $KRISHNAN இப்போது சோலானாவில் கிடைக்கும்" என அதில் என குறிப்பிடப்பட்டுள்ளது.
த்ரிஷா பெயரிலேயே கிரிப்டோகரன்சி உருவாக வாய்ப்பு இல்லை, எனவே இது ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். யாரும் அந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை த்ரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,"எனது X பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அது சரிசெய்யப்படும் வரை அதில் வரும் பதிவுகள் என்னுடையது அல்ல... நன்றி" எனத் தெரிவித்துள்ளார். தற்போது வரை த்ரிஷாவின் எக்ஸ் பக்கம் ஹேக்கர்களிடம் இருந்து மீட்கப்படாததால் பரபரப்பு நிலவுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications