திரிஷா கொஞ்ச நாளில் அமைச்சர் ஆகிடுவாங்க.. நடிகர் மன்சூர் அலிகானால் மீண்டும் சர்ச்சை
சென்னை: சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‛‛திரிஷா கொஞ்ச நாளில் அமைச்சர் ஆகிடுவாங்க'' என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.
சென்னையில் இன்று நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது மன்சூர் அலிகான் பல்வேறு நடிகர், நடிகைகள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர், ‛‛நீங்கள் திரிஷா பற்றி பேசும்போது..'' என்று கேள்வி கேட்க முயன்றார். அப்போது மன்சூர் அலிகான் உடனே குறுக்கிட்டார்.
அதன்பிறகு அவர்,‛‛ஹே.. ஹே.. நான் எங்கே பேசுனேன். கட் பண்ணி வைச்சி நாசம் பண்ணுனா.. அதை மறக்க முடியலனு சொல்லற.. அப்படினா தனியா போ.. இன்னும் கொஞ்ச நாள்ல அவங்க அமைச்சர் ஆகிடுவாங்க. அங்க போ'' என்று கூறினார். ஆனால் எந்த அடிப்படையில் மன்சூர் அலிகான் இப்படி கூறினார்? விளையாட்டாக கூறினாரா? ஏதேனும் உள்நோக்கத்துடன் கூறினாரா? என்பது இன்னும் தெரியவில்லை. இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.
முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இந்த படத்தின் கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார். இதில் நடிகர் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான பிறகு நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில் நடிகை திரிஷா பற்றி கூறிய கருத்து சர்ச்சையானது.
பெட்ரூம் காட்சியுடன் திரிஷாவை அவர் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியது. மன்சூர் அலிகானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மன்னிப்பு கோரினார். அதன்பிறகு தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது திரிஷா கொஞ்சம் நாளில் அமைச்சராகி விடுவார் என்று மன்சூர் அலிகான் கூறி பரபரப்பை பற்றவைத்துள்ளார்.
அதேபோல் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் - நயன்தாரா மோதல் பற்றி மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், ‛‛நயன்தாரா கேரளாவில் இருந்து வந்துள்ளார். சக நடிகை, கதாநாயகி.. அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்கப்பட்டுள்ளார். தனுஷ் பெரிய நடிகராக ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். இதெல்லாம் பெருசு பண்ணலாமா?. ரூ10 கோடி என்னமா? வைச்சிக்கம்மா என்று சொல்ல வேண்டும்.
ஒரு செகன்ட் வருவதற்கு எல்லாம் காசு கொடு என்று கேட்டால் நம் தமிழனுக்கு என்ன மரியாதை இருக்கு. தனுசு எல்லாம் இதை பண்ணக்கூடாது. நயன்தாரா கல்யாண வீடியோ எதோ எடுக்குது. படத்தில் வராத ஒரு காட்சியை பயன்படுத்தி இருக்கிறாங்க.. இதுக்கு ஒரு பிரஸ்மீட். நயன்தாராவுக்கு ஒரு சப்போர்ட்.. யப்பா யப்பா'' என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications