முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். கையோடு, கொளத்தூரில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் மீது காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
விஜய், சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று விஜய் சென்னையில் பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

நேற்று, பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் அப்படியே பரப்புரையை தொடங்கினார். முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலும் அவர் பரப்புரை செய்தார். இந்நிலையில், கொளத்தூரில் அவர் பரப்புரையில் ஈடுபட்டபோது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
நிலை கண்காணிப்பு குழு அதிகாரி, குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பரப்புரையின்போது தேர்தல் நடத்தை விதிகளை விஜய் மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 5 ஒலிபெருக்கிகளை வைத்து மட்டுமெ பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியிருக்கிறார்.
பரப்புரை தொடங்கிய முதல் நாளே இப்படி வழக்கு வாங்கியிருக்கிறார் விஜய். முன்னதாக வில்லிவாக்கத்தில் பரப்புரை செய்ய முயன்றபோது, கூட்ட நெரிசல் அதிகமானதால், பரப்புரை ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications