Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை தேனாம்பேட்டையில் ரூ.2000 கோடி சொத்துக்கு சிக்கல்.. இரவோடு இரவாக காங்கிரஸ் செய்த வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் சுமார் 200 கிரவுண்ட் நிலம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இந்த நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு 2000 கோடியாகும். இந்த நிலத்தில் குறிப்பிட்ட அளவு இடத்தை தனியார் நிறுவனத்திற்கு மூப்பனார் காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த நிலத்தில் கட்டிடம் கட்டட அனுமதி கிடைக்காத நிலையில், அப்படியே இருந்தது.தற்போது அந்த நிலம் தனியார் நிறுவனத்தால் கையகப்படுத்தப்படும் என்று அச்சம் அடைந்த காங்கிரசார்,முன்பகுதி நுழைவுவாயிலில் செங்கல் கொண்டு சுவர் அமைத்து பாதுகாத்துள்ளனர். அத்துடன் காவலுக்கும் நிற்கிறார்கள்.

சென்னையில் அண்ணா சாலையை ஒட்டியுள்ள சத்தியமூர்த்தி பவன் தவிர, காமராஜர் அரங்கம் அமைந்துள்ள தேனாம்பேட்டை இடமும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாகும். இந்த இடத்தை அந்த காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் வாங்கி கொடுத்தார். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு சென்னை தேனாம்பேட்டையில் 200 கிரவுண்ட் நிலம் காமராஜரால் வாங்கி தந்தார். இப்போது இந்த நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி ஆகும். இதில் 20 கிரவுண்ட் இடத்தில் காமராஜர் அரங்கம் கட்டப்பட்டு, மீதமுள்ள 180 கிரவுண்ட் இடம் மைதானமாக இருக்கிறது.

congress assets

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஜி.கே.மூப்பனார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். அப்போது சுமார் 150 கிரவுண்ட் இடத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்காக பிரபல தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அரசிடம் இருந்து முறையான அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

அதேநேரம் காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் மேற்கொண்டு எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாததால், இந்த மைதானம் பயன்படுத்தபடாமல் அப்படியே காலியிடமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் அந்த நிலத்தை கையகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக காங்கிரசார் மத்தியில் அச்சம் ஏற்பட்டது,

இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கட்சிக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த காமராஜர் அரங்க மைதானத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டு அங்கு நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் மிக பிரமாண்டமாக நடந்தது. பல ஆயிரம் பேர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்கள்.

காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் முடிந்த கையோடு, இந்த மைதானத்திற்குள் செல்வதற்கான அண்ணாசாலை பகுதியில் உள்ள முன்பகுதி நுழைவுவாயிலில் காங்கிரஸ் கட்சியினர் இரவோடு இரவாக செங்கல் வைத்து சுவர் எழுப்பினார்கள். இதையடுத்து, அந்த காங்கிரஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் போட்டிருந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஏதேனும் பிரச்சினை எழுப்பலாம் என்று தகவல் பரவிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, ராபர்ட் புருஷ் எம்.பி., மாநில துணைத்தலைவர் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று அதிகாலை முதலே அங்கு அமர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே அந்த தனியார் நிறுவன உரிமையாளர் காங்கிரஸ் அறக்கட்டளை மைதானத்திற்கு உரிமை கோரி நேற்று காலை வந்துள்ளார். இதனால் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டது, இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறும் போது, காமராஜர் வாங்கி கொடுத்த இடத்தில் சமூக விரோத செயல்பாடுகள் நடக்கக்கூடாது என்றே அண்ணாசாலை பகுதியில் உள்ள அந்த நுழைவு வாயில் சுவர் எழுப்பி, அடைத்துள்ளோம்.

தனியார் நிறுவன ஒப்பந்தம் என்பது, மூப்பனார் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் ஆகும். ஆனால் பொதுவாக ஒப்பந்த சட்டப்படி, ஒரு ஒப்பந்தமானது 3 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. எனவே, அந்த தனியார் நிறுவனம் 3 ஆண்டுகளுக்குள் கட்டிடம் கட்டியிருக்க வேண்டும். ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை . இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடத்தில் பேசி அவருக்கு இழப்பீடு வழங்கப்பட இருந்தால், அதனை அவர் முறையாக பெறலாம் என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+