இந்தியாவை முடிச்சுவிட்ட டிரம்ப்.. ஐடி துறைக்கு பெரும் சிக்கல்!.. இன்னும் 6 மாசம்தான் எல்லாம் போச்சு
சென்னை: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை வெகுவாக அதிகரித்திருக்கிறார். இதன் தாக்கம் இந்தியாவில் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் துறைகளில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அதிரடியான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளுக்கு இடையேயான போர், டிரம்ப் பொறுப்பேற்றது போன்ற காரணங்களால் தொடர்ந்து தங்கம் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை டிரம்ப் வெகுவாக அதிகரித்திருக்கிறார். இறக்குமதி வரி அதிகரிப்பால் இந்தியாவில் உள்ள ஐடி துறை மற்றும் ஸ்டார்ட் அப் துறைகள் பெரும் பாதிப்பைச் சந்திக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் உற்பத்தி என்பது வெகுவாக குறைந்துவிட்டது. 1980 முதல் கிட்டத்தட்ட 50 வருடங்களாக உற்பத்தி பெருமளவில் அங்கு செய்யப்படுவதில்லை. அமெரிக்காவின் உற்பத்தி துறை வேலையை மற்ற நாடுகள் திருடுகின்றன என்று டிரம்ப் நினைக்கிறார்.
அமெரிக்காவுக்கு பொருள்களை இறக்குமதி செய்யும் மற்ற நாடுகள் பொருள்களை குறைந்த விலைக்கு இறக்குமதி செய்வதனால் தான் இந்தப் பிரச்சனை. இறக்குமதி வரியை அதிகரித்தால் மற்ற நாட்டினர் அமெரிக்காவில் உற்பத்தியை தொடங்குவார்கள் என்று டிரம்ப் நினைக்கிறார். அதனால் அமெரிக்காவுக்கு நல்லது நடக்கும் என்ற தவறான எண்ணத்தால் இதனைச் செய்கிறார்.
அமெரிக்காவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் உற்பத்தி வெற்றிகரமாக செய்யப்பட்டது. முதல் பெட்ரோல் கார் உற்பத்தி செய்ததும் அமெரிக்காவில் தான். மற்ற நாடுகள் அதனை காப்பி செய்தனர். எலக்ட்ரானிக்ஸில் முதல் முதலில் டிரான்சிஸ்டர், மைக்ரோபிராசஸர் போன்றவை அங்குதான் உற்பத்தி செய்யப்பட்டன. அமெரிக்காவை பொருத்தவரை டிசைன், ஆராய்ச்சி, ஆர்என்டி, புதிய பொருள்களை தயாரிப்பதில் அமெரிக்கா மிகவும் வலிமை வாய்ந்ததாக உள்ளது.
ஆனால் அந்தப் பொருள்களை வெளிநாடுகளில் உற்பத்தி செய்து வாங்குகின்றனர். வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் அந்தப் பொருள்களை இனி அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுதான் டிரம்பின் எண்ணமாக உள்ளது. ஸ்டீல் உற்பத்தி போன்ற அனைத்துமே அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், உதாரணத்துக்கு எந்த ஊரில் இரும்பு குறைந்த விலைக்கு கிடைக்குமோ அங்குதான் உற்பத்தி செய்ய முடியும். எல்லா பொருள்களையும் அமெரிக்காவில் உற்பத்தி செய்தால் சரியாகிவிடும் என்று தவறாக கருதி டிரம்ப் இறக்குமதி வரியை அதிகரித்திருக்கிறார்.
தேர்தல் பிரசாரத்தின்போதே அமெரிக்காவின் உற்பத்தி துறை வேலையை மற்ற நாடுகள் திருடுகின்றன. விசா இல்லாமல் மற்ற நாட்டினரை நாட்டுக்குள் விட்டு நமக்கான வேலையை பறித்துவிட்டனர் என்று கூறிதான் பிரசாரம் மேற்கொண்டார். இறக்குமதி வரியை அதிகரித்து அமெரிக்காவில் மீண்டும் உற்பத்தி மேற்கொள்ளப்படும், விசா இல்லாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறிதான் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் 6 மாதம் முதல் ஓராண்டுக்குள் ரெசிஷன் (பொருளாதார மந்தநிலை) வருவதற்கான பிரகாசமான வாய்ப்புள்ளது. அப்படி வந்தால் இந்தியாவில் இருக்கும் ஐடி துறைகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். ஏஐ வந்த பின்னர் லோயர் லெவல் வேலைகள் எல்லாம் போய்விட்டன. பங்குச் சந்தையைப் பார்த்தால் ஐடி துறை தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரியவரும். மருந்து விலை குறைவாக கிடைக்கும் என்பதால் பார்மா துறைக்கு வரி விதிக்கப்படவில்லை. ஆட்டோ உதிரி பாகங்கள் உற்பத்தி செய்வோருக்கு பாதிப்பு ஏற்படும்.
மற்ற நாடுகளைப் பார்க்கும்போது திருப்பூருக்கு குறைவான வரிதான் போடப்பட்டுள்ளது. எனவே, டெக்ஸ்டைல், பார்மா துறைக்கு டிரம்பின் முடிவால் நல்லது நடந்துள்ளது. ஆனால் ஆட்டோ மற்றும் ஐடி துறைக்கு மிகுந்த பாதிப்பு உண்டாகும். அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் கடந்த ஒன்றரை வருடமாக அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பணம் வருவதில்லை.
அமெரிக்காவில் இப்போதைக்கு வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்பில்லை. வரி விதிக்கப்பட்டுள்ளதால் இனி அங்கு விலைவாசி ஏறும். விலைவாசி ஏறினால் இன்பிளேசன் கூடும். இன்பிளேசன் அதிகரித்தால் வட்டி விகிதம் ஏற்றுவார்களே தவிர இறக்கமாட்டார். வட்டி விகிதம் ஏறும்போது அவர்கள் ஊரிலேயே பணத்தை வைத்துக் கொள்வார்கள். அதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பணம் வெளிநாடுகளில் இருந்து வருவது நின்றுபோகும். ஓயோ, ஓலா, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் மோசமான நிலையில்தான் உள்ளன என்றார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications