டிடிஎப் வாசன் உயிரை காப்பாற்றிய ஹெல்மெட்.. என்ன ஸ்பெஷல்.. ஹெல்மெட்டில் உள்ள கையெழுத்து யாருடையது?
சென்னை: பைக் ரேசர் வாசனை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். மிகப்பெரிய விபத்தில் சிக்கியும் வாசன் இன்று உயிரோடிருப்பதற்குக் காரணம் அவனது AGV Pista GP RR ஸ்பெஷல் ஹெல்மெட் என்று நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். அதன் சிறப்புகளையும் குறிப்பிட்டுள்ளனர்.
டிடிஎப் வாசன், நேற்று முன் தினம் விலை உயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காஞ்சீபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்று தனது பைக்கில் வீலீங் செய்தார். அப்போது பைக் தடுமாறி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் வாசன் தூக்கி வீசப்பட்டார் பைக் பலமுறை உருண்டது.

மிகப்பெரிய விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிர் பிழைக்க காரணம் என்ன என்பது பற்றியும் அவர் உபயோகப்படுத்தும் ஹெல்மெட்டின் சிறப்பை பற்றியும் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஹரிஹரசுதன் தங்கவேலு.
வாசனின் உயிரைக் காப்பாற்றியது ரைடிங் லாவகம், ஸ்பான்டேனியஷ் என்று பதிவுகள் பார்த்தேன். இதெல்லாம் இருப்பவன் பைத்தியம் போல பொதுச் சாலையில் வீலிங் சாகசத்தில் ஈடுபடமாட்டான். அதுவும் சாகசம்செய்தது RX100 ல் இல்லை, தொடுவதற்கு முன்பே பறக்கும் 1345 சிசி ஹயபூசாவில். இதில் 245 வேகம் உச்சம் தொட்டிருக்கிறார்.
இருந்தும் வாசன் இன்று உயிரோடிருப்பதற்குக் காரணம் அவனது AGV Pista GP RR ஸ்பெஷல் ஹெல்மெட். பைக் ரேசிங் உலக நாயகன் வாலன்டினா ரோசி பயன்படுத்தும் ஹெல்மெட் இது. இதில் அவரது கையெழுத்தும், கைரேகையும் பொறிக்கப்பட்டிருப்பதால் இது ஸ்பெஷல் எடிசன். வாசன் இதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தார். விலை 1.5 லட்சம். இவ்வளவு இருந்தும் இது இந்தியாவின் ISI விதிகளுக்கு உட்படாத இல்லீகல் வகை ஹெல்மெட். இதற்கே ஒரு வருடம் வரை சிறைதண்டனை தரப்படலாம்.
பைக் என்பது சிறுவர்களின் கனவு. பொம்மையாக வாங்குவதில் ஆரம்பித்து பதின் வயதில் நாடி, நரம்பு, ரத்தம், உயிர் எல்லாம் பைக்காக இருக்கும். அது குறித்துப் பார்ப்பது, விவாதிப்பதெல்லாம் அவர்களது ஆத்மார்த்தம். 18 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பஜாஜ் பல்சர் வீலிங் விளம்பரம் இன்னும் என் மனதில் இருக்கிறது. பொல்லாதவன் பட வெற்றிக்கு ஒரு வகையில் பல்சரும் காரணம். காலம் மாறினாலும் பைக் கனவுகள் மாறாது. ஆகவே தான் விரும்பியதை வைத்து சாகசம் செய்யும் எவனும் அவர்கள் கனவு நாயகன் தான். வாசன் இப்படித்தான் நம் வீட்டுப் பிள்ளைகளின் மனதில் வெறித்தனமாய் இடம் பிடித்திருக்கிறார்.
நாம் ஏன் வாசனைத் திட்டுகிறோம் என்பது கூட இவர்களுக்குப் புரியாது. அதற்கும் அழுவார்கள். பெற்றோர்கள் செய்ய வேண்டியது. 20 லட்சத்தில் பைக், அதை ஓட்ட 5 லட்சம் உபகரணங்களும் அணிந்து கொண்டே வாசன் சாகசம் செய்திருக்கிறான். அந்த சாலையில் நீயோ, நானோ, உன் அம்மாவோ நடந்து வந்து இதில் சிக்கியிருந்தால் இது விபத்தா, இல்லை கொலை முயற்சியா எனக் கேளுங்கள். அப்போதும் விபத்து எனச் சொன்னால் பிள்ளை எனப் பார்க்காமல் தத்து கொடுத்து விடுங்கள்.

அரசுக்கு - 245 வேகத்தில் பைக் ஓட்டும் வீடியோ பதிவு இருந்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை இதற்காகவாவது எடுக்க வேண்டும். வாசன் மிகப்பெரும் இன்ப்ளூயன்சர் என்பதால் அவனது ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு காலை உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல தவறான செயல்களுக்குத் தூண்டும் கழிசடைகளை களைவதும் முக்கியம். சட்டத்தையும் சமூகத்தையும் கோமாளியாய்ப் பார்ப்பவர்களுக்கு இது உரிய பாடம் கற்பிக்கும்.
-வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து துறை பரிந்துரை- காமிராவ ஹெல்மெட்ல வச்சுட்டு பேய் மாதிரி ஓட்டுற அத்தன பேருக்கும் இப்ப வந்திருக்கும் பார் ஒரு பயம். அதுக்கு பேரு தான் விழிப்புணர்வு !! என்றும் ஹரிஹரசுதன் தங்கவேலு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே பைக்கில் வீலீங் செய்து விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் டிடிஎப் வாசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட டிடிஎப் வாசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications