தூக்கி வீசப்பட்ட வாசன்.. உயிர் பிழைக்க காரணமே இதுதான்.. நோட் பண்ணுங்க இளைஞர்களே.. ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 245 கிமீ வேகத்தில் வந்து வீலிங் செய்து விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன், தரமான ஹெல்மெட், விலை உயர்ந்த ஜாக்கெட், பாதுகாப்பான கையுறை , தரமான காலணி அணிந்திருந்த காரணத்தால் உயிர் தப்பி இருக்கிறார். ஆனால் அவரை பின்பற்றும் இளைஞர்கள், எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வீலிங் செய்தால் பெரிய சிக்கல் ஏற்படும்.

தெரிந்தே இளைஞர்களிடம் தவறான சாகசத்தை ஊக்குவிப்பது, அதன்மூலம் சம்பாதிப்பது என்பது இன்றைய 2கே கிட்ஸ் இளைஞர்கள் மனதில் எந்த மாதிரியான மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை டிடிஎப் வாசன் உணரவே இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

TTF Vasan survived the accident because he was wearing a quality helmet and expensive jacket

தரமான ஹெல்மெட், விலை உயர்ந்த ஜாக்கெட்ஸ், பாதுகாப்பான கையுறைகள், பிராண்டெடு ஷூஸ் என ஒரு தேர்ந்த பைக் ரேஸர் ஆக எல்லாவற்றையும் முறையாக கடைப்பிடித்ததால் தான் 245 கிமீ வேகத்தில் வந்து நெடுஞ்சாலையில் வீலிங் செய்தும் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சிறிய காயங்களோடு பிழைத்திருக்கிறார்.

ஆனால் அவருடைய உயிர் குறித்து அவருக்கு இருக்கும் முன்னெச்சரிக்கை மற்றவர்கள் உயிர் குறித்தும் இருந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்திருக்கிறார் என்பது உங்களுக்கே தெரியும்.. இதுபற்றி நெட்சடின் ஒருவர் கூறுகையில், இந்திய சாலைகளில் 80 கிமி வேகத்தில் தான் போக முடியும். அதிகபட்சமாக 120 கிமீ வேகம் வரை சில சாலைகளில் போக முடியும். 245 கிமீ வேகத்தில் எல்லாம் இந்தியாவின் எந்த சாலையிலும் போக முடியாது. அதேபோல் பைக் ரேஸிங் செய்வதற்கு ஏற்ற வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் செப்பனிடப்படவில்லை.

அதேபோல் பொதுப்போக்குவரத்துக்கான பயணத்தில் இருக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு 245கிமீ வேகத்தில் வருவது என்பது திட்டமிட்ட ஒரு கொலை முயற்சியாகும்.

அடிப்படை கட்டமைப்பு இல்லாத நாட்டில் இந்த அதிவேக சாகசத்தை தனித்திறமை என யூடியூபில் விளம்பரம் செய்வது அவரது Followers ஐயும் தவறாக வழிநடத்துவது மேலும் விபத்துக்களை அதிகரிக்கும் ஆபத்தை கொண்டது என்று கூறுகிறார்.

TTF Vasan survived the accident because he was wearing a quality helmet and expensive jacket

மற்றொரு நெட்டிசன் கூறும் போது, டிடிஎப் வாசன் செய்தது விபத்து இல்ல, தவறாக முடிந்த ஒரு பைக் ஸ்டன்ட்... வீலிங் முயற்சி. மைதானத்துல செய்ய வேண்டியத மக்கள் பயன்படுத்துற சாலையில் செய்திருக்கிறார். இதுக்கு நிச்சயம் சட்டப்படி கடுமையான தண்டனை குடுக்கணும். குறுக்க குழந்தைகளோ வேறு யாருமோ வந்திருந்தா என்னாகிருக்கும். ஆனா போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காது. அப்படி எடுத்தாலும் நூறு ரூபாய் ஃபைன்தான் அதிகபட்சம் விழும். அவன் திரும்பி வந்து இன்னொரு பெரிய சூப்பர் பைக்ல இதை விட தாறுமாறா ஒன்று செயவ்ர். ஏன்னா அது டிடிஎப்தொழில். அதை வச்சுதான் பணமும் புகழும் சம்பாதிக்கிறார்.

அப்படி அவன் விபத்துக்கு பிறகு திரும்பி வந்து பண்ணும்போது அவனை பற்றின இமேஜ் இன்னும் பூஸ்டப் ஆகதான் வாய்ப்பு உள்ளது. பசங்க அவனை ஒரு முன்னுதாரணமா நினைக்கவும். அவருக்கு நடந்த விபத்தை பார்த்து பசங்க யாரும் பயப்படமாட்டாங்க. கெத்துண்ணா என்றுதான் நினைப்பாங்க. என்று கூறியுள்ளார்.

மொத்தத்தில் தரமான ஹெல்மெட், விலை உயர்ந்த ஜாக்கெட்ஸ், பாதுகாப்பான கையுறைகள், பிராண்டெடு ஷூஸ் என ஒரு தேர்ந்த பைக் ரேஸர் ஆக போய் வீலிங் செய்து விபத்தை சந்தித்த நிலையில், இதுபோல் அவரை பின்பற்றுபவர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் செய்தால் என்ன ஆகும். நிச்சயம் பல குடும்பங்கள் கண்ணீரில் தான் இருக்கும். விபத்தில் சிக்கி உயிரை இழப்பார்கள். எதிர்காலத்தை தொலைத்துவிடுவார்கள். பலரும் ஆடம்பர பைக் வாங்கி வாழ்க்கையை சில நாளில் தொலைத்திருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

இன்றைக்கு பல இளைஞர்கள் ,வீலிங்க், ரேஸிங்கில் பைத்தியம் போல் இருக்கவும், அப்பா அம்மாவிடம் 18 வயசு ஆவதற்கு உள்ளாகவே ரேஸ் பைக்குகளை வாங்கித்தருமாறு டார்ச்சர் செய்யவும் டிடிஎப் வாசன் போன்றவர்களின் சாகச செயல்கள் தான் என்றும் குற்றச்சாட்டுக்கள் உள்ளது.

தன்னை பல லட்சம் பேர் பார்க்கிறார்கள்.பின்பற்றுகிறார்கள் என்கிற போது, அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகத்தான் இருக்க வேண்டும். எந்த வகையிலும் அவர்களை தவறாக வழிநடத்தக்கூடாது. அப்படி செய்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டிய முதல் ஆளே அந்த பிரபலம் தான்.

அந்த வகையில் டிடிஎப் போன்றோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு உடனடியாக அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+