டிடிஎஃப் வாசன் 2033 வரை பைக்கை தொடவே கூடாது.. மஞ்சள் வீரன் படம் கைவிடப்படுகிறதா? ஏன் தெரியுமா?
சென்னை: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் திரைப்படம் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Twin throttlers எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் அவ்வப்போது பைக் ஓட்டும் வீடியோக்களை தனது சேனலில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு 2 கே கிட்ஸ்கள் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர்.

இவர் பைக் ஓட்டும் சாகசங்களை பார்த்து பூரித்து போய் அவருடைய யூடியூப் சேனலுக்கு ஏராளமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் கூட பைக்கில் அதிவேகமாக செல்வது, சாகசங்களை நிகழ்த்துவது உள்ளிட்டவைகளை செய்து வருகிறார்.
இவருக்கு 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு வட இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் 247 கி.மீ. வேகத்தில் இவர் சென்ற வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே தனது பைக்கில் வாசன் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கி பெரும் சேதத்திற்குள்ளானது. அவருடைய பைக் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் சிக்கினாலும் வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவரை கைது செய்த காஞ்சிபுரம் போலீஸார் இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அன்றைய தினமே அவர் ஜாமீன் கோரினார். ஆனால் ஜாமீன் மனுவை நீதிபதி இனிய கருணாகரன் தள்ளுபடி செய்தார். கடந்த வெள்ளிக்கிழமை (செப் 22 ஆம் தேதி) அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் எண் 2 இல் நீதிபதி செம்மல் முன்னிலையில் ஜாமீன் கேட்டு வாசனின் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர்.
இந்த ஜாமீன் மனு மீது வழக்கு விசாரணை நடந்த நிலையில் வாசன் மீது விபத்து ஏற்படுத்தும் வழக்குகள் தொடர்ந்து வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி மீண்டும் வாசன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை காஞ்சிபுரம் மாவட்டம் , அமர்வு நீதிமன்றம் 2 இல் நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தது.
வாசனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாசனின் வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞரோ அவருக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என வாதிட்டார். இதையடுத்து இன்னும் இந்த வழக்கில் புலனாய்வு விசாரணை முடியாததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாது என்றார்.
இந்த நிலையில் அக்டோபர் 3 ஆம் தேதிடன் வாசனின் நீதிமன்றக் காவல் முடிவடையும் நிலையில் அவர் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் நீதிபதி இனியா கருணாகரன் முன்பு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி வாசன் அக்டோபர் 16 ஆம் தேதி வரை புழல் சிறையில் இருப்பார்.
இந்த நிலையில் அவருடைய ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, வாசனுடைய பைக்கை எரித்தால் என்ன, அவருடைய யூடியூப் சேனலை ரத்து செய்தால் என்ன என்றெல்லாம் குட்டு வைத்தார். இந்த நிலையில் அவருடைய பைக் லைசன்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் 2033 ஆம் ஆண்டு வரை பைக்கை தொடவே கூடாது.
இதற்கான உத்தரவை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் நடிப்பதாக இருந்த மஞ்சள் வீரன் படம் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸாவதாக இருந்தது. இந்த படத்தில் டிடிஎஃப் வாசன் பைக் ரேஸராகவே வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது அதில் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல் உள்ளது. போஸ்டரில் ஒரு அய்யனார் சிலையும் உள்ளது.
அதன் கீழ் மணிக்கு 299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் பைக் ஓட்ட 10 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இனி சினிமாவில் கூட பைக்கை ஓட்ட முடியாத நிலை வாசனுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மஞ்சள் வீரன் படமும் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications