Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவலருக்கு டிக்கெட்.. கலவரமான களம்! ஒரு நாளில் 9 லட்சம் பெண்கள்.. பேசி முடிச்சு விடுங்க.. பறந்த கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஒரு நாளைக்கு 9.25 லட்சம் பேர் பெண்களை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் எங்களால் காவலர்களை இலவசமாக பயணிக்க அனுமதிப்பது என்பது எங்களுக்கு பெரிய விஷயம் இல்லை என காவலர்களிடம் டிக்கெட் கேட்ட விவகாரத்தில் தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் சம்மேளனம் கூடுதல் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நாங்குநேரியில் இருந்து தூத்துக்குடிக்கு பயணித்த காவலர் ஒருவருக்கு பேருந்தில் பயணச்சீட்டு எடுப்பதில் நடத்துனருக்கும் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை வாரண்ட் இல்லாமல் காவலர்களுக்கு அனுமதி இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்தது.

TTSF letter to the Additional Secretary on transport and police clash

இதனையடுத்து போக்குவரத்து விதியை சரியாக கடைபிடிக்கவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை எனக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகளுக்கும், பேருந்து ஓட்டுனருக்கும் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

போலீசார்-போக்குவரத்து: போக்குவரத்து கழக மேலாளர் பெயரில் அபராதம் விதித்து அதற்கான ரசீதை ஓட்டுனர்களிடம் கொடுத்து அனுப்பி வருகின்றனர் போக்குவரத்து போலீசார். இதனால் காவலர்களுக்கும் போக்குவரத்து அரசு பேருந்து ஓட்டுனர் நடத்தினர்களுக்கும் இடையேயான பனிபோர் முற்றி வருகிறது. ஒரு நாளைக்கு 9.25 லட்சம் பேர் பெண்களை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் எங்களால் காவலர்களை இலவசமாக பயணிக்க அனுமதிப்பது என்பது எங்களுக்கு பெரிய விஷயம் இல்லை என தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கூடுதல் செயலருக்கு கடிதம்: இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பத்மநாபன், போக்குவரத்து துறை கூடுதல் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,"தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கழக பணியாளர்கள் பயணிக்க அவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளிலேயே அதற்கான அறிவிப்பும் உள்ளது. அதுபோல் மாணவர்கள், மகளிர் விடியல் பயணம், கிராமப்புற கலைஞர்கள், தியாகிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கை போன்ற பலவகையான இலவச பயணங்கள் நடைமுறையில் உள்ளது. அனுதினமும் இந்த இலவச பயணமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என்பதும் உண்மையாகும்.

TTSF letter to the Additional Secretary on transport and police clash
TTSF letter to the Additional Secretary on transport and police clash

நடத்துனர் மரணம்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் வள்ளியூரில் ஒரு காவலர் பணியில் இருந்த நடத்துனரை தாக்கி இரத்த காயம் ஏற்பட்டது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும், விழுப்புரம் சென்னை வழித்தடத்தில் புறநகர் பேருந்தில் ஏறிய சீருடையில் இல்லாத காவலர் என கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தபோது அவர் காவலர்தான் என்பதற்கான அடையாள அட்டை கூட இல்லாத நிலையில் தனது மேல் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு அஞ்சி அதிர்ச்சியடைந்த கடலூர் கிளை நடத்துனர் பேருந்திலேயே மரணம் அடைந்தார்.

காவல் உயரதிகாரிகள்: இதை தொடர்ந்து T.T.S.F. மாநில தலைமை திருமிகு. திரிபாதிரி DGP அவர்களை நேரில் சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு கோரிய போது வாரண்ட் இல்லாமல் காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் எவரும் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார். மேலும் திருமிகு. C.சைலேந்திரபாபு DGP அவர்கள், 'Rc.No. 1120843/HR1/ 2021, நாள்: 29.07.2021 மீண்டும் காவலர்கள் தமிழக அரசு பேருந்தில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது, பேருந்து பயணம் மேற்கொள்ளும் வாரண்ட் இல்லை என்றால் பயணச்சீட்டு பெறவேண்டும் என உத்தரவிட்டார்.

ஆறுமுகபாண்டி: இதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத நிலையில் கடந்த 21.05.2024 அன்று நாங்குநேரியில் பேருந்தில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்த பரங்கிமலை ஆயுதப்படை காவலர் திரு.ஆறுமுகபாண்டி பயணச்சீட்டு பெறமுடியாது என வாக்குவாதம் செய்தார் என்பது ஊடகம் மூலம் நாட்டு மக்களும், போக்குவரத்து துறைக்கும் நன்கு தெரியும். உடனடியாக போக்குவரத்து துறை இந்த விசயத்தில் தலையிட்டது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

போலீசார் அபராதம்: மேற்படி சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் கழக பேருந்தின் மீதும், நடத்துனர்கள், ஓட்டுனர்கள் மீதும் அபராதம் விதித்து வருகிறார்கள். நமது நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை வசூல் குறியீடு, ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து துறை நேரக்கட்டுப்பாடும் நிர்ணயித்துள்ளதால், நடத்துனர்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ காலங்களில் கொள்ளளவிற்கு அதிகமான பயணிகள் ஏற்ற வேண்டிய கட்டாயமும், ஓட்டுனர்கள் குறித்த நேரத்திற்கு பேருந்து நிலையம் செல்ல வேண்டியுள்ளதால் வழித்தடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் காலதாமதத்தை ஈடுசெய்திட பேருந்தின் வேகத்தை சற்று கூட்டி இயக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

நடவடிக்கை வேண்டும்: இது நடைமுறையில் ஏற்படும் எதிர்பாராது நிகழும் நிகழ்வாகும் இதற்கும் அபராதம் என்பது பரிசீலிக்கப்பட வேண்டும். காவலர்களை இலவச பயணம் அனுமதிப்பதிலோ, கொள்ளளவு பயணிகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்பதையோ ஓட்டுனர், நடத்துனர்கள் கட்டாயம் ஏற்பார்கள். மேலும் வருவாய் இழப்பை தவிர்த்திடவும் ஒரு அமைதியற்ற சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர போக்குவரத்து துறை உள்துறை செயலாளருடன் பேசி ஒரு சுமூக நிலை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

மகளிர் பயணம்: ஒருநாளைக்கு 9,25,000 இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களை அனுமதிக்கும், ஓட்டுனர், நடத்துனர்களுக்கு காவலர்களின் இலவச பயணத்தை அனுமதிப்பதில் எந்தவிதமான தயக்கமோ, மறுப்போ இல்லை. பரிசோதகர்கள் (CI) வழித்தடத்தில் இரவு நேரங்களில், தொலைதூர பேருந்துகளில் அனுமதிக்கக்கூடாது என நடத்துனர்களுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்து வருகிறார்கள். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் நடத்துனர்கள் பணியின்போது மிகுந்த சிரமங்களை மேற்கொள்ளுகிறார்கள்.

வழிகாட்டல் தேவை: எனவே போக்குவரத்து கூடுதல் முதன்மை செயலாளர் அவர்கள், உடனடி நடவடிக்கை உள்துறை செயலாளருடன் சுமூகமாக பேசி 1-1, எக்ஸ்பிரஸ், பாயிண்ட் டு பாயிண்ட், SETC, புறநகர் பேருந்து, நகர பேருந்து எந்தெந்த பேருந்துகளில் காவலர்கள் இலவச பயணம் எவ்வளவு தூரம் மேற்கொள்ளலாம் என ஒரு வழிகாட்டலை அறிவித்து இப்பிரச்சனைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+