சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத ஜோசப் விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?" என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற உடனே, பதவியேற்ற மேடையில் வைத்தே பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் கோப்பில் கையெழுத்திட்டார். மேலும், இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தலைமை வகிப்பதற்காக ஐ.ஜி பவானிஸ்வரி நியமிக்கப்பட்டார்.

TTV Dhinakaran Attacks Vijay Government Over Unfulfilled Singappen Promise

இதனையடுத்து இந்த திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தும் நோக்கில் காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் தீவிரமாக செயலாற்றினர். அதன் அடிப்படையில் இந்த திட்டத்தில் பணிபுரிய இருக்கும் பெண் காவலர்களுக்கு பிரத்யேக உடைகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினமே சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அதற்குள் அவர் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டதால் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பிற்பகல் முதலமைச்சர் விஜய் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், இன்று (மே 29) சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை அவர் தொடங்கி வைப்பார் என கூறப்பட்டது. மேலும் அதற்கான ஏற்பாடுகளும் ராஜரத்தினம் மைதானத்தில் செய்யப்பட்டு, காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகைகளும் நடத்தினர். இதனை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனிடையே அந்நிகழ்ச்சி நிர்வாக காரணங்களாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது முறையாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், எதற்காக இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறித்தும் முறையான காரணங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. மாற்று தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனால் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிருப்தி மற்றும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. மேலும் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் எப்போது தொடங்கி வைக்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், "வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையுமே பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்- சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத ஜோசப் விஜய் அவர்கள் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்பு தான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மையென்றால், தமிழகத்தில் குதிரை பேர அரசு எதற்கு?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+