ஆர்கே நகரில் ஆரவாரமாக வென்றாரே டிடிவி தினகரன்.. நிலைமையை பாருங்க.. போட்டியிட்ட இடமெல்லாம் தோல்வி
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வென்றதற்கு பிறகு நடந்த அனைத்து தேர்தலிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். 2017 முதல் 2024 வரை சந்தித்த தேர்தல்கள் மற்றும் வாக்கு சதவீதம் பற்றி பார்ப்போம் .
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு வகையில் அதிகார மோதல்கள் நடந்தது. அந்த காலக்கட்டத்தில் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.. அப்போது சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் ஜெயலலிதாவைவிடவும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆர்கே நகரில் ஜெயலலிதா 2016ம் ஆண்டு 39545 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால் டிடிவி தினகரனோ 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். சுமார் 11 வருடங்களுக்கு பிறகு சுயேட்சையாக ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றார் என்றால் அது டிடிவி தினகரன் தான்.

இதற்கிடையே ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அதிமுகவை கைப்பற்றியதால் அமமுகவை 2018ல் ஆரம்பித்த டிடிவி தினகரன், 2019 லோக்சபா தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். இதில் அமமுக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.. எனினும் தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது.
2019 லோக்சபா தேர்தலில் அமமுக b 9,08,163 வாக்குகள் பெற்று 8.46 சதவீதம் வாக்குசதவீதத்தை கைப்பற்றியது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக அப்போது உருவெடுத்தது.மேலும் தென் மாவட்டங்களில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக தோற்றுப்போக அமமுக முக்கிய காரணமாக இருந்தது. அப்போது நடந்த 21 தொகுதி இடைத்தேர்தலில் 10.39 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. நிலக்கோட்டை, பரமக்குடி, விளாத்திக்குளம் உள்பட சுமார் 10 தொகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை அமமுக வாங்கியிருந்தது,
ஆனால் 2021 சட்டசபை தேர்தலில் 2019ஐ ஒப்பிடும் போது வாக்கு சதவீதமும் வாக்குகளும் மிகக்கடுமையாக சரிந்தது. எனினும் தென்மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை பாதித்தது டிடிவி தினகரனின் அமமுக. 2021 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்ற கட்சிகள் வரிசையில் அமமுக 7வது இடத்தை பிடித்தது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 2021 சட்டசபை தேர்தலில் 10 லட்சத்து 65 ஆயிரத்து 142 வாக்குகள் கிடைத்தது. 2019ல் வாக்கு சதவீதம் அமமுகவிற்கு 2.47 சதவீதம் ஆகும். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தோல்வியை தழுவினார்-
இந்நிலையில் டிடிவி தினகரனின் அமமுக பாஜக கூட்டணியில் 2024 தேர்தலில் போட்டியிட்டது. தேனி மற்றும் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட அமமுக இரண்டிலுமே படுதோல்வி அடைந்தது. தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 292668 வாக்குகள் வாங்கினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் தங்க தமிழ்செல்வன் 571493 வாக்குகள் பெற்றார். இதனால் டிடிவி தினகரன் 278825 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்,
இதேபோல் திருச்சி லோக்சபா தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் நாதன் வெறும் 100747 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தை பிடித்ததுடன் டெபாசிட்டையும் பறிகொடுத்தார். திருச்சியில் நாதக 3வது இடத்தை பிடித்தது. திருச்சியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வைகோ மகன் துரை வைகோ, அதிமுக வேட்பாளர் கருப்பையாவைவிட 313094 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications