Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிடிவி தினகரன் திவாலானவர் என்ற அறிவிப்பு செல்லாது.. அமலாக்கத்துறை அப்பீலை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கடந்த 1995 - 1996 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்றதாகவும், பின்னர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும் டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறையினர், ஃபெரா என்னும் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

TTV Dhinakaran is not bankrupt: Chennai HC cancels the notice of Enforcement directorate

இந்த வழக்கில் கடந்த 1998ஆம் ஆண்டு டிடிவி தினகரனுக்கு 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையம், 31 கோடி ரூபாய் அபராதத்தை, 28 கோடி ரூபாயாக குறைத்து உத்தரவிட்டது.

இந்த அபராதத்தை செலுத்தாததால் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, டிடிவி தினகரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி, அந்த நோட்டீஸை ரத்து செய்து கடந்த 2003ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005 ஆம் ஆண்டில் தாக்கல் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தது. இந்த மனு பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+