காஞ்சி சங்கராச்சாரியார் சால்வையை தூக்கி போடுறது எல்லாம் ஒரு அவமானமா? டிடிவி தினகரன் அசால்ட் பதில்
சென்னை: காஞ்சி சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் சால்வையை தூக்கிப் போடுவது என்பது ஆச்சாரங்களின்படிதான்; அது அவமானமே இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்றிருந்தார். அவருக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் சால்வையை கையில் கொடுக்காமல் தூக்கிப் போட்டார். இது தொடர்பான வீடியோ, படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

தமிழிசை சர்ச்சை
காஞ்சி சங்கராச்சாரியாரின் செயல் கடுமையாகவும் விமர்சிக்கப்பட்டது. அதேநேரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கையில் பணிவுடன் முந்தைய சங்கராச்சாரியார் சால்வை வழங்கும் படங்களுடன் ஒப்பிட்டும் விமர்சிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தமிழிசைவுக்கு சால்வையை கையில் வழங்கும் படத்தை பதிவு செய்து இதுதான் சுயமரியாதையை மதிக்கும் திராவிட மாடல் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

அவமரியாதையே இல்லை
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்தார். அப்போது அவரிடம் காஞ்சி சங்கராச்சாரியார், ஆளுநர் தமிழிசைக்கு சால்வையை தூக்கி போட்டது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு டிடிவி தினகரன் அளித்த பதில்: காஞ்சி மடம் என்பது ரொம்ப பழமையான மடம். அந்த மடாதிபதிக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். அவர் அப்படி எனக்கும் கூட தந்துள்ளார். அதை நான் அவமதிப்பாக நினைத்ததும் இல்லை.

காஞ்சி மட ஆச்சாரம்
கோவிலில் கர்ப்பகிரகத்துக்குள் போகாமல் வெளியே நின்றுதான் சாமி கும்பிடுகிறோம். அதேபோல் அந்த மடத்துக்குப் போகிறவர்கள் அந்த சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டும். சட்டசபைக்கு உறுப்பினர்கள்தான் போக வேண்டும். அதை ஏற்றுக் கொண்டுதான் செல்கிறோம் அல்லவா? சில நடைமுறைகள் இருக்கின்றன... அங்கே ஆச்சாரங்கள் இருக்கின்றன. ஆச்சாரங்களுடன் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய விதி. சட்ட திட்டம். இதனை அவமரியாதையாக நான் பார்க்கவில்லை.

துணைவேந்தர் நியமனம்
நாடு விடுதலை அடைந்தது முதல் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்கள்தான் நியமனம் செய்து வருகின்றனர். ஆளுநர் நியமிப்பது தவறு என கருதி இருந்தால் திமுக கூட்டணியில் இருந்தபோதே மாற்றி இருக்கலாம். தமிழக அரசின் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications