அண்ணாமலை கோரிக்கை நிராகரிப்பு.. இனி பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை.. டிடிவி தினகரன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு அவசியம் இல்லை என்று கூறிய டிடிவி தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய போதே அண்ணாமலையுடன் பேசியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரல் மாதத்தில் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். அப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தாங்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்காக நானே பிரச்சாரம் செய்வேன் என்றும் அறிவித்தார். இதனால் அதிமுக ஒருங்கிணைப்புக்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது.

TTV Dhinakaran on Annamalai

ஆனால் திடீரென தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமே காரணமாக பார்க்கப்படுகிறது. இதன்பின் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை முறையாக வழிநடத்த தெரியவில்லை என்று விமர்சித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்ற அண்ணாமலை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அண்ணாமலை - டிடிவி தினகரனின் சந்திப்பு தமிழக அரசியலில் கவனம் பெற்றது. இந்த நிலையில் அண்ணாமலையின் கோரிக்கையை டிடிவி தினகரன் நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்த போதுதான் எங்களுடன் தொடர்பில் இருந்து பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்தார். அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய போது, அண்ணாமலையுடன் பேசினேன். நேரில் சந்தித்த போதும் அவசரப்பட வேண்டாம் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்த மறுபரிசீலனைக்கு அவசியம் இல்லை. 2021 சட்டசபைத் தேர்தலின் போதே அதிமுக கூட்டணிக்கு வர அமமுக தயாராக இருந்ததாக பேசி வருகிறார்கள். எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி என்னை சந்திக்க தைரியம் வரும்.

அவருக்கு தயக்கம் இருக்கும். அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் வரை அமமுகவுடன் கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை. டெல்லியில் உள்ள சில நல்ல உள்ளங்கள், திமுகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டால் மட்டுமே வெல்ல முடியும் என்று கூறினார்கள். அவர்கள் சொல்லும் போதே எனக்கு நன்றாக தெரியும்.. இது நடக்காது என்று.. நான் மதிக்கும் சிலர் சொல்லும் போது, வாய்ப்பே இல்லை என்று கூறி இருக்கிறேன்.

ஏப்ரல் மாதத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த போது, சில நல்ல உள்ளங்கள் நாங்கள் விரும்புகிற மாற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார்கள். அதற்கு வாய்ப்பில்லை என்று உணரும் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம். எங்களுக்கு துரோகம் செய்து எடப்பாடி பழனிசாமியால் நேருக்கு நேர் சந்திக்க முடியும் என்று நம்பவில்லை.

ஒரு கட்டத்தில் என்னை டெல்லிக்கு அழைத்து என்னை சமாதானம் செய்ய முயற்சித்தார்கள். அதனை புரிந்து கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தேன். அண்ணாமலை வந்த போதும் கூட, இதனைதான் கூறினேன். அவரும் நானும் நல்ல நண்பர்கள். அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பரோ இல்லை.. ஆனால் துரோகத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+