இப்போ தும்முனுதான் சரியா இருக்கும்! நேரம் பார்த்து அடிக்கும் டிடிவி! எடப்பாடிக்கு எதிராக புரட்சி படை
சென்னை: அதிமுகவுக்குள் மீண்டும் சசிகலா வரப் போகிறார் என்ற பேச்சு பரபரப்பை கிளப்பி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் அவரை சந்தித்து பேசியதாக தகவல்கள் உலாவுகின்றன. இது ஒரு புறம் இருக்க அதிமுகவின் முக்கியமான நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகி உள்ள தகவல் எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆனால், அது தொடர்பாக ரியாக்ட் செய்யாமல் இருக்கிறார் என்கின்றனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின் அதிமுக மீண்டும் ஒருமுறை உடைந்து இருக்கிறது. கரூர், புதுக்கோட்டையில் பலமாக இருந்த விஜயபாஸ்கர் & கோ. தென் மாவட்டங்களில் வலுவாக இருந்த சில முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவி விட்டனர்.

ஏற்கனவே டிடிவி தினகரன் சசிகலா, ஓபிஎஸ் என பல முன்னாள் தலைவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் கட்சியில் இருக்கும் எம்எல்ஏக்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிவி சண்முகம் வேலுமணி தலைமையில் ஒரு கோஷ்டி செயல்பட்டு வருகிறது.
அதிமுக
அந்த கோஷ்டியில் 6 பேர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியமாகி உள்ளனர். மேலும் சில எம்எல்ஏக்களும் தாவ இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிமுகவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளும், தொழிற்சங்கத்தை சேர்ந்த மாநில தலைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தொடர் நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், சசிகலா அதிமுகவிற்கு வரலாம் என சொல்லப்படுகிறது. அதற்காக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்திருக்கிறது. இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் சசிகலாவை சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தன் பங்குக்கு அதிமுகவை உடைக்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறார் டிடிவி தினகரன், என்ற தகவல் தென் மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
சசிகலா
தொடர் தோல்விகளால் அதிமுக மோசமான நிலையில் இருக்கும் நிலையில் பிரிந்து சென்ற டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என வேலுமணி கூறியது, தினகரனை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தொடர்ந்து 11 தோல்விகளை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த நிலையில் அவருக்கு எதிராக சில குரூப்களை சேர்க்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.
டிடிவி தினகரன்
அதே நேரத்தில் தனி கட்சி ஆரம்பித்து இருக்கும் தான் அதிமுகவிற்குள் மீண்டும் செல்ல இதுதான் நேரம் என உணர்ந்திருக்கும், அவர் தென் மாவட்ட நிர்வாகிகள் சிலருடன் பேசி வருகிறாராம். அதிமுகவில் தற்போது நிலவும் குழப்பங்களை தனக்கு பாசிட்டிவ் ஆக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதால் டிடிவி தினகரன் மிக பொறுமையாக காய் நகர்த்தி வருகிறார் என்கிறனர்.
ரகசியமாக பேச்சு
அதே நேரத்தில் வெளிப்படையாக போர்க்கொடி தூக்கினால் தன்னோடு சேர்த்து அதிமுக நிர்வாகிகளும் பந்தாடப்பட்டு விடுவார்கள் என்பதால் அதிமுக நிர்வாகிகளுடன் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஊடகங்களிலும் பேட்டி கொடுக்கிறார் என்கிறனார்.
தென் மாவட்ட அரசியல்
ஆனால் அதிமுகவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் அல்லது அங்கு இருக்கும் நிர்வாகிகளை தன்னுடன் சேர்க்க வேண்டும் என்பதால் அதிருப்தி நிர்வாகிகள், தென் மாவட்ட நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் பேசி வருகிறார் என்கின்றனர். அது மட்டும் அல்லாமல் நேரடியாக எடப்பாடி எடப்பாடி உடன் மோதல் போக்கை கையாளாமல் கூடவே இருந்து சாதிக்கும் முயற்சியை கையில் எடுத்திருக்கிறார் என்கின்றனர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள்.


Click it and Unblock the Notifications
