சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டார்கெட் 100 தொகுதிகள்... திமுகவை விட விவேகம்.-அதிமுகவுக்கு எதிராக தேமுதிகவுடன் தினகரன் மாஸ் ப்ளான்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக அணிக்கு எதிராக 100 தொகுதிகளை இலக்கு வைத்து கவனம் செலுத்தினாலே போதும் என்கிற ப்ளான் போட்டு வேலை செய்கின்றனராம் தினகரனின் அமமுகவினரும் விஜயகாந்தின் தேமுதிகவினரும்.

சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது. ஆட்சியைத் தக்க வைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது அதிமுக.

ராஜ்யசபா எம்பி கனவில் நடிகர் கார்த்திக் : குஷ்புவிற்கு பிரச்சாரம்...அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவுராஜ்யசபா எம்பி கனவில் நடிகர் கார்த்திக் : குஷ்புவிற்கு பிரச்சாரம்...அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவு

பாஜக, மநீம

பாஜக, மநீம

அதிமுக தயவில் எப்படியாவது சட்டசபைக்குள் மீண்டும் நுழைந்துவிடுவது என்பது பாஜக கணக்கு. இந்த களேபரங்களுக்கு மத்தியில் முதல் எம்.எல்.ஏ.வை அனுப்ப விரும்புகிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.

அமமுக- தேமுதிக

அமமுக- தேமுதிக

இன்னொரு பக்கம் தங்களது பலம் எப்படியானது என்பதை காட்டியாக வேண்டிய நெருக்கடியில் அமமுக, தேமுதிக ஆகியவை உள்ளன. தென் தமிழகத்தில் அமமுக, வட தமிழகத்தில் தேமுதிக இணைந்து வேலை செய்தால் கணிசமான வாக்குகளைப் பெற முடியும். இது அதிமுகவை ஆட்டம் காண வைக்கும் என்பது இரு கட்சிகளின் வியூகம்.

ஜரூர் ஓட்டு பிரிப்பு

ஜரூர் ஓட்டு பிரிப்பு

அதேநேரத்தில் தொகுதிகளின் வெற்றி எண்ணிக்கைக்கு அப்பால் பலத்தை காட்டுவோம் என்பதில் இந்த இரு கட்சிகளும் தீவிரமாக உள்ளனவாம். இதனால் 100 தெற்கே, வடக்கே என தொகுதிகளை இலக்கு வைத்து அதிமுக ஓட்டுகளை பிரிக்கும் வேலைகளை ஜரூராக செய்து வருகின்றனராம்.

பதிலடி தரும் அதிமுக

பதிலடி தரும் அதிமுக

இந்த மெகா வியூகத்தை எப்படியாவது முறியடித்தாக வேண்டும் என நினைக்கிறது அதிமுக. இந்த தேர்தலுடன் அமமுக, தேமுதிகவுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்; அதை நாம்தான் செய்ய வேண்டும் என கருதுகிறது அதிமுக. ஆகையால் இந்த 100 தொகுதிகளிலும் உக்கிரமான போட்டி நிலவுகிறது.

English summary
Sources said that AMMK General Secretary TTV Dhinakaran targetted 100 Constituencies against ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X