டிடிவி தினகரன் வெளியிட்ட ட்வீட்.. அடுத்த நாளே வேலுமணியிடம் ரெய்டு.. ஆஹா மேட்சிங்.. வைரலான போஸ்ட்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு மட்டும் அவருக்கு நெருக்கமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
மொத்தம் 53 இடங்களுக்கு மேல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று மாலை வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளையறிக்கை
விஷயம் இதுதான்: நேற்று தமிழகத்தின் வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார் . அப்போது கடந்த ஆட்சி காலத்தில் நிறைய கடன் வாங்கப்பட்டதாகவும், தற்போது தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலை மீதும் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் கடன் இருப்பதாகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார் .

நஷ்டத்தில் அரசு நிர்வாகம்
அரசு பஸ் போக்குவரத்து கழகம், மின்சாரவாரியம் போன்றவை நஷ்டத்தில் இயங்கி வருவதை புள்ளி விவரங்களோடு அவர் தெரிவித்தார். இதுபோன்ற புள்ளிவிவரங்களை பார்த்ததும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த பலரும் வெள்ளை அறிக்கை வெளியிட்ட நோக்கம், மின்சார கட்டணம், பஸ் கட்டணத்தை உயர்த்துவதுதானா என்று கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர். இந்த நிலையில்தான் டிடிவி தினகரன் நேற்று மாலை ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார்.

டிடிவி தினகரனின் கவலை
அதில் அவர் கூறியிருந்ததாவது: தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. அப்படி ஒரு முடிவினை தி.மு.க அரசு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது.

டிடிவி தினகரன் கருத்து
கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்பதெல்லாம் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல' அமைந்துவிடும். அதற்குப் பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. ஒரு லட்சம் கோடியை அதற்கு காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அப்படி செய்யாமல் வெறுமனே அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுகொண்டால் பாசத்தில் தி.மு.க அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது. எனவே, யாரோ சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச் சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

டிடிவி தினகரன் ட்வீட்
இந்த ட்விட்டர் பதிவில், மக்களிடம் கட்டணத்தை உயர்த்தாதீர்கள் . முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகப் தவறாக பயன்படுத்திய பணத்தை அதற்கு காரணமானவர்களிடம் இருந்து மீட்டு எடுங்கள் என்பதைத்தான் அழுத்தமாக தெரிவித்திருந்தார் டிடிவி தினகரன். இந்த நிலையில்தான் இன்று காலை வேலுமணி வீட்டில் ரெய்டு நடைபெற்றதும் இந்த டுவிட்டர் பதிவு வைரலாகியுள்ளது.

811 கோடி ஊழல்
சுமார் 811 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய மோசடி நடைபெற்று இருப்பதால் பணத்தை அங்கே இருந்து கஜானாவுக்கு கொண்டு வரவேண்டும், மக்களிடம் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் பரவலாக எழும் வாய்ப்பு இருக்கிறது. இது திமுகவுக்கு சாதகமான ஒரு அம்சம்தான். இந்த சோதனை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழாமல் இருக்க இது உதவும். எடுத்த பணத்தை வசூலிக்கிறார்கள் என்ற மனநிலை வருவதற்கு நேற்றைய வெள்ளை அறிக்கை மற்றும் பல தலைவர்கள் கூறிய கருத்துக்கள் ஒரு அச்சாரமாக அமைந்து விட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கட்டணங்கள்
கட்டணங்களை அதிகரிக்காமல் யார் ஊழல் செய்து இருந்தாலும் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து கஜானாவுக்கு கொண்டு வரும் வேலையை அரசு செய்தால், நாங்கள் வரவேற்போம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுவார்கள் என்பதுதான், அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் இந்த நிகழ்வுகளின் தொகுப்பாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கப்படுகிறது.
Recommended Video

அடுத்தடுத்த ரெய்டுகள்
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இப்போது அதிமுக கட்சியிலும், முந்தைய ஆட்சியிலும் மூன்றாவது முக்கிய பொறுப்பு வகித்த வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி டெல்லியில் முகாமிட்டுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர் எதற்காக டெல்லி சென்றுள்ளார் என்ற விவரம் பல்வேறு யூகங்களை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த யூகங்களுக்கு நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். ராஜேந்திர பாலாஜி பாஜகவில் சேர மாட்டார் அது வதந்தி என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் நடக்கும் நிகழ்வுகளை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டிருப்பது உறுதியாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications